'மயோனைஸைக்கு ஓராண்டு காலம் தடை’ - உற்பத்தி செய்ய சேமிக்க விற்கவும் தமிழ்நாடு அரசு தடைவிதிப்பு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  'மயோனைஸைக்கு ஓராண்டு காலம் தடை’ - உற்பத்தி செய்ய சேமிக்க விற்கவும் தமிழ்நாடு அரசு தடைவிதிப்பு!

'மயோனைஸைக்கு ஓராண்டு காலம் தடை’ - உற்பத்தி செய்ய சேமிக்க விற்கவும் தமிழ்நாடு அரசு தடைவிதிப்பு!

Marimuthu M HT Tamil Published Apr 24, 2025 09:26 AM IST
Marimuthu M HT Tamil
Published Apr 24, 2025 09:26 AM IST

மயோனைஸைக்கு ஓராண்டு காலம் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அரசு கூறியிருக்கிறது. மேலும், உற்பத்தி செய்ய சேமிக்க விற்கவும் தமிழ்நாடு அரசு தடைவிதித்துள்ளது.

'மயோனைஸைக்கு ஓராண்டு காலம் தடை’ - உற்பத்தி செய்ய சேமிக்க விற்கவும் தமிழ்நாடு அரசு தடைவிதிப்பு!
'மயோனைஸைக்கு ஓராண்டு காலம் தடை’ - உற்பத்தி செய்ய சேமிக்க விற்கவும் தமிழ்நாடு அரசு தடைவிதிப்பு!

ஷவர்மா, தந்தூரி போன்ற உணவுகளில் பயன்படுத்தப்படும் மயோனைஸில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருப்பதால் நோய்கள் பரவுவதற்கு வாய்ப்பு இருப்பதாக இது குறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மயோனைஸ் செய்ய பச்சை முட்டையைப் பயன்படுத்துவதால், கிருமிகள் தொற்று அதிகரிக்க வாய்ப்பு என்றும், சால்மோனெல்லா பாக்டீரியா காரணமாக இது விஷமாக மாறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், முட்டையில் செய்யக்கூடிய மயோனைஸில் ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய ஆபத்து மிக அதிகம் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சில உணவகங்களில் மயோனைஸ் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டு, சேமிக்கப்படுவதால் மக்களுக்கு உடல் நலக்குறைவை ஏற்படுத்தும் என்பதால் தடை செய்யப்படுகிறது. குறிப்பாக , மயோனைஸை உற்பத்தி செய்யவும், சேமித்து வைக்கவும் விற்பனை செய்யவும் தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது.

உத்தரவை மீறுபவர்கள் மீது அபராதம் மற்றும் உரிமம் ரத்து போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத்துறை சார்பில் வெளியிடப்பட்ட தமிழ்நாடு அரசிதழில் ஏப்ரல் 8ஆம் தேதியில் இருந்து ஓராண்டுக்கு இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.