’ராணுவத்திற்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் நடத்திய பேரணி போரை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது’ பெ.சண்முகம் விமர்சனம்!
”இந்தியா கூட்டணியில் உள்ள மற்ற தலைவர்கள் எல்லாம் போரை வரவேற்று பேசுகிறார்கள் என்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை”

’ராணுவத்திற்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் நடத்திய போரை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது’ பெ.சண்முகம் விமர்சனம்!
முதலமைச்சர் ராணுவ வீரர்களை ஊக்குவிக்க பேரணி நடத்துவதாகவும், ஆனால் இந்த நடவடிக்கை யுத்த தயாரிப்பை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்து உள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், வடக்காடு கிராமத்தில் வன்முறை நடந்த இடங்களை பார்வையிட்ட பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இதுபோன்ற மோதல்களைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை என்றும் விமர்சித்தார்.