’மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைந்தால் நான் முதலமைச்சராக இருக்கமாட்டேன்!’ ஈபிஎஸ்க்கு முதலமைச்சர் பதில்!
திமுக அரசு எந்த விதத்திலும் அலட்சியமாக இருந்தது இல்லை. அரசை பொறுத்தவரை நிச்சயமாக சொல்கிறேன். ஏலம் விட்டாலும் சரி, நிச்சயமாக உறுதியாக அதற்கு உரிய அனுமதியை தர வாய்ப்பே இல்லை. நான் முதலமைச்சராக இருக்கும் வரையில் நிச்சயமாக ஒன்றிய அரசு இந்த திட்டத்தை கொண்டு வர முடியாது. வந்தால் தடுத்தே தீருவோம்.

மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இந்த தீர்மானத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசினார். அதில், எதிர்க்கட்சித் தலைவர் பேசும் போது, ’நாடாளுமன்றத்தில் உள்ள உங்கள் உறுப்பினர்கள் என்ன செய்தீர்கள் என கேட்டு உள்ளார்.’ எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்ன் நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிர்த்து இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல போராட்டத்தில் ஈடுபட்ட நேரத்தில் அமைச்சர் மூர்த்தி அவர்கள் நேரடியாக சென்று மக்களிடம் பேசினார். அரசு ஆதரவாக உங்களுக்கு உள்ளது. போராட்டத்தை கைவிட சொன்னார். சட்டமன்றத்தில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார் என்பதை எதிர்க்கட்சித் தலைவருக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ”எதிர்க்கட்சித் தலைவர் இவ்வளவு வேகமாக பேசும் காரணத்தால் நீங்கள் ஏதோ சாதித்துவிட்டோம் என்று நினைக்க வேண்டாம். இது தொடர்பாக தொடர்ந்து கடிதம் எழுதி உள்ளோம். தொடர்ந்து போராட்டம் நடத்தி உள்ளோம். நாடாளுமன்றத்தில் கண்டன குரலை பதிவு செய்து உள்ளோம்.”