தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Tamil Nadu Cm Mk Stalin Who Returned From Abroad Commented On The Launch Of Actor Vijay's Political Party

MK Stalin About Vijay Politics: ’விஜய் அரசியல் குறித்த கேள்வி!’ தாயகம் திரும்பிய முதல்வர் பரபரப்பு பேட்டி!

Kathiravan V HT Tamil
Feb 07, 2024 08:42 AM IST

“பிரதமரின் நாடாளுமன்ற உரையை பார்த்தேன், படித்தேன், ரசித்தேன், சிரித்தேன்.”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - நடிகரும், தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - நடிகரும், தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய்

ட்ரெண்டிங் செய்திகள்

காற்றாலை மின் உற்பத்தி, நீர் மறுசுழற்சியில் முன்னணியில் உள்ள ஆக்சியானா நிறுவனம், உயர்தர வீட்டுக்கட்டுமான பொருட்களை உற்பத்தி செய்யும் ரோக்கா, கண்டெயினர் முனையங்களை அமைக்கும் ஹபக்ராயுடு நிறுவனம், சாலை கட்டமைப்பு வசதிகளை செய்யும் அப்ரட்டீஸ் நிறுவனம், மோட்டார் வாகன உற்பத்தி செய்யும் கெஸ்டாம் நிறுவனம், ரயில்வே சார் பொருட்களை உற்பத்தி செய்யும் டால்கோ நிறுவனம், பொறியியல் வடிவமைப்பு பயிற்சிக்கான எடிபான் நிறுவனம், மருந்து உற்பத்தி நிறுவனமான மேப்ட்ரீ நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்தித்து பேசினேன். இவர்கள் தங்கள் முதலீடுகள் செய்ய ஆர்வம் தெரிவித்துள்ளனர். இதனால் 3 ஆயிரத்து 440 கோடி அளவுக்கு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. 

கேள்வி:- வேறு நாடுகளுக்கு செல்ல திட்டம் உள்ளதா?

திட்டமிடும்போது உங்களிடம் சொல்லிட்டு செய்கிறேன், நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு என்னுடைய பயணம் இருக்கும். 

கேள்வி:- நாடாளுமன்றத்தில் பிரதமர் உரையை பார்த்தீர்களா?

பார்த்தேன், படித்தேன், ரசித்தேன், சிரித்தேன். பாஜகதான் எதிர்க்கட்சி போலவும், காங்கிரஸ்தான் ஆளும் கட்சி போலவும் அவர் பேசி உள்ளார். 

கேள்வி:- 400 இடங்களை கைப்பற்றுவோம் என பிரதமர் சொல்லி உள்ளாரே?

மொத்தம் 400 தானா, 543 இடங்களையும் கைப்பற்றுவோம் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. 

கேள்வி:- விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ளது குறித்து உங்கள் பார்வை என்ன?

மக்களுக்கு தொண்டாற்ற யார் வந்தாலும் நான் மகிழ்வேன்.

WhatsApp channel