’அதானியை நான் சந்திக்கவில்லை!’ பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
“அதானி உடன் முதலமைச்சருக்கு தொடர்பு உள்ளது. அதானி முதலமைச்சர் சந்தித்துவிட்டு சென்றார் என்று பேசுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் என்ன காரணத்தாலோ அவர் அதை பேசவில்லை. என்ன காரணம் என்று தெரியவில்லை. ஒருவேளை உண்மை தெரிந்துவிட்டது என்பதால் விட்டுவிட்டு இருப்பார் என்று கருதுகிறேன்.”
தொழிலதிபர் அதானியை சந்தித்து பேசவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்து உள்ளார்.
பாமக உறுப்பினர் ஜி.கே.மணியின் கேள்விக்கு பதில் அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் ஜி.கே.மணி அவர்களின் கட்சியை சேர்ந்தவர்கள் இது குறித்து வெளியில் தொடர்ந்து பேசி வருகின்றனர். ஆனால் வெளியில் பேசி வருவதை அனைத்தையும் அவர் இந்த அவையில் பேசவில்லை. அதானி உடன் முதலமைச்சருக்கு தொடர்பு உள்ளது. அதானி முதலமைச்சர் சந்தித்துவிட்டு சென்றார் என்று பேசுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் என்ன காரணத்தாலோ அவர் அதை பேசவில்லை. என்ன காரணம் என்று தெரியவில்லை. ஒருவேளை உண்மை தெரிந்துவிட்டது என்பதால் விட்டுவிட்டு இருப்பார் என்று கருதுகிறேன்.
தமிழ்நாட்டில் அதானி குழுமத்தின் தொழில் முதலீடுகள் குறித்து பொதுவெளியில் வரும் தவறான புகார்களுக்கு மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் விளக்கம் அளித்து உள்ளனர். அதானி நிறுவனத்தின் முதலீடுகள் குறித்து தமிழ்நாடு அரசுக்கு கலங்கம் விளைவிக்க நினைப்பவர்களுக்கு சில கேள்விகளை எழுப்பு விரும்புகிறேன். அதானி மீது சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை செய்ய வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.
திமுக மீது குறை சொல்லிக் கொண்டு இருக்கும் பாஜகவோ, பாமகவோ இந்த கோரிக்கையை ஆதரிக்க தயாராக உள்ளீர்களா? இப்போதும் சொல்கிறோம் தமிழ்நாட்டுக்கும் அதற்கும் எந்த சம்பதமும் கிடையாது. என்னை வந்து அவர் சந்திக்கவும் இல்லை, அவர் பார்க்கவும் இல்லை. நான் கேட்கும் கேள்வி என்னவெனில் அதானி விவகாரத்தை விசாரிக்க கோரி பேச நீங்கள் ஆதரவாக உள்ளீர்களா? என கூறினார்.
டாபிக்ஸ்