Vallalapatti : ‘டங்ஸ்டன் ஏலத்தில் குறுக்குசால் ஓட்ட நினைத்தார்கள்’ வள்ளாலப்பட்டியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Vallalapatti : ‘டங்ஸ்டன் ஏலத்தில் குறுக்குசால் ஓட்ட நினைத்தார்கள்’ வள்ளாலப்பட்டியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

Vallalapatti : ‘டங்ஸ்டன் ஏலத்தில் குறுக்குசால் ஓட்ட நினைத்தார்கள்’ வள்ளாலப்பட்டியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

Stalin Navaneethakrishnan HT Tamil
Jan 26, 2025 08:30 PM IST

‘‘2, 3 முறை டங்க்ஸ்டன் சுரங்கம் வேண்டாம் என்று தமிழ்நாடு அரசு சார்பில் ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதி இருக்கிறோம். தொடக்கத்திலேயே நம்முடைய எதிர்ப்பை தெரிவித்திருக்கிறோம். ஆனால் இன்னைக்கு அதை திட்டமிட்டு பொய்களை கூறி நடத்திட்டு இருக்காங்க,’’

Vallalapatti : ‘டங்ஸ்டன் ஏலத்தில் குறுக்குசால் ஓட்ட நினைத்தார்கள்’ வள்ளாலப்பட்டியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
Vallalapatti : ‘டங்ஸ்டன் ஏலத்தில் குறுக்குசால் ஓட்ட நினைத்தார்கள்’ வள்ளாலப்பட்டியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

‘‘ஒன்றிய பாஜக அரசை பொறுத்தவரைக்கும் என்னென்ன கொடுமைகளை மக்களுக்கு விரோதமான செயல்களை செய்து கொண்டிருக்கிறது என உங்களுக்கெல்லாம் நன்றாக தெரியும். இன்றைக்கும் இந்தியாவில் இருக்கக்கூடிய பல்வேறு மாநிலத்தில் இருந்து தலைநகரமாக இருக்கும் டெல்லி நகரத்தை நோக்கி விவசாயிகள் பெரிய பேரணி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். போராட்டம் நடத்தி அதனால் நூற்றுக்கணக்கானவர்கள் இறந்து போய் இருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியும்.

அதிமுக என்ன செய்தது?

ஆனால் மூன்றே மாதத்தில் உங்கள் வெற்றிக்கான காரணம், தமிழக அரசு காட்டியுள்ள கடுமையான எதிர்ப்பு. மாநில அரசினுடைய அனுமதி இல்லாமல் முக்கிய கனிம வளங்கள் ஒன்றிய அரசு ஏலம் விடலாம் என்று நாடாளுமன்றத்தில் பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட சட்டம்தான் இதற்கு மூல காரணம்.

இந்த சட்டம் கொண்டு வருவதற்காக பாராளுமன்றத்தில் மசோதாவை நிறைவேற்றியபோது திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமல்ல திமுக கூட்டணியில் இருக்கக்கூடிய எல்லா கட்சிகளும் ஒன்று சேர்ந்து அதை கடுமையாக நாம் எதிர்த்தோம். ஆனால் இன்றைக்கு தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய அதிமுக என்ன செய்தது? மேலவை உறுப்பினராக இருக்க கூடிய தம்பிதுரை அவர்கள் இந்த சட்டத்தை ஆதரித்து வரவேற்று பேசியிருக்கிறார்.

ஏலமிட பாஜக முயற்சி செய்தது

அதெல்லாம் டிவியில் வந்திருக்கு. நீங்க எல்லாம் சோசியல் மீடியாவில் பார்த்திருப்பீங்க. இதுதான் டங்க்ஸ்டனுடைய பிரச்சினையா தொடக்கப் புள்ளியாக இருந்தது. இதைத்தொடர்ந்து 2, 3 முறை டங்க்ஸ்டன் சுரங்கம் வேண்டாம் என்று தமிழ்நாடு அரசு சார்பில் ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதி இருக்கிறோம். தொடக்கத்திலேயே நம்முடைய எதிர்ப்ப தெரிவித்திருக்கிறோம்.

ஆனால் இன்னைக்கு அதை திட்டமிட்டு பொய்களை கூறி நடத்திட்டு இருக்காங்க. நாம எழுதின கடிதங்களையும் மீறி ஒன்றிய பாஜக அரசு ஏலம் விடுவதற்கான முயற்சியை செய்தார்கள். அதனால்தான் தொடர்ந்து நாம் போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. 23 11 2024 அன்று அரிட்டாபட்டியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் இருக்கக்கூடிய மக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து எதிராக தீர்மானம் போட்டாங்க. அப்போது அமைச்சர் மூர்த்தி கலந்துகொண்டு இந்த திட்டத்தை அமைக்க முயற்சி செய்தால் நிச்சயமாக நம்முடைய முதலமைச்சர் அனுமதி தர மாட்டார் என்பதை தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

நீங்க அதெல்லாம் மறந்திருக்க மாட்டீங்க. அதற்குப் பிறகு 29.11.2024 அன்று மேலூரில் வணிகர்கள் மற்றும் பொது மக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டபோது அமைச்சர் மூர்த்தி அங்குவந்து வந்து தெளிவா சொல்லியிருக்கிறார். இந்த செய்தி எல்லாம் தொலைபேசியில் பேசிட்டு, அதை எல்லாம் தொடர்ந்து இந்த கருத்துக்களை, இந்த உணர்வுகளை எல்லாம் ஒன்றிய அரசுக்கு நானே கடிதம் எழுதியிருக்கிறேன்.

குறுக்குசால் ஓட்ட நினைத்தார்கள்

இந்த திட்டத்தை உடனடியாக ரத்து செய்யணும் என்று கோரிக்கை வைத்து நானே கடிதம் எழுதி இருக்கிறேன். அன்றைய தினம் மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் கலந்துகொண்ட கூட்டம் நடத்தப்பட்டு அமைச்சர் மூர்த்தி கலந்துகொண்டு விளக்கியிருக்கிறார். இதை தொடர்ந்து சட்டமன்றத்தில் 9.12. 2024 அன்று டங்க்ஸ்டனுக்கு எதிரான தீர்மானத்தை நானே கொண்டு வந்தேன் . இந்த பிரச்சனையில் குறுக்குசால் ஓட்டலாம் எல்லாம் நினைத்தார்கள்.

நான் இருக்கிற வரையில நிச்சயம் டங்க்ஸ்டன் கனிமங்களை சுரங்கம் வருவதற்கான வாய்ப்பே இல்லை. நாம் அனுமதி தந்தால் தான் அது உள்ளே கொண்டு வர முடியும். அதையும் மீறி வந்தால் நிச்சயமாக நான் முதலமைச்சராக இருக்க மாட்டேன் என்று அழுத்தம் திருத்தமாக சட்டமன்றத்தில் பதிவு செய்திருக்கிறோம்.

இதுதான் எங்க முடிவு இன்னும் தெளிவாக எடுத்துச் சொன்னேன். அப்படி ஒரு சூழல் வந்தால் முதலமைச்சராகவே நான் இருக்க மாட்டேன் என்று சொன்னபோது கூட, நம்முடைய அமைச்சர், நம்முடைய சட்டமன்ற உறுப்பினர்களெல்லாம் ஏன் அந்த வார்த்தையை சொன்னீங்க? சொல்லி இருக்க வேண்டிய அவசியம் இல்லைன்னு சொன்னாங்க. எனக்கு அதுபற்றி கவலையில்லை. பதவி பற்றி கவலை இல்லை. மக்களுடைய பிரச்சினைகள் தான் என் கவலை என்பது தெளிவாக எடுத்துச் சொன்னேன்.

இது உங்களுடைய அரசு

மக்களாகிய உங்கள் உறுதியான போராட்டத்தையடுத்து ஒன்றிய அரசு இப்ப இந்த ஏல அறிவிப்பை ரத்து பண்ணியிருக்காங்க. இந்த நேரத்துல தீர்மானம் நிறைவேற்றுவதற்காக ஆதரித்து இருக்கக்கூடிய எல்லா கட்சிகளுக்கும் பல்வேறு கட்சி எழுந்து உணர்வை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். உங்களுக்கு நன்றி வணக்கத்தை நான் மீண்டும் மீண்டும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

நான் ஆட்சி பொறுப்பு ஏற்றபோதே தெளிவாகச் சொன்னேன், இது என்னுடைய அரச அல்ல, இது உங்களுடைய அரசு என்று என்றுமே உங்களின் ஒருவனாக இருந்து என்னுடைய கடமையை நிறைவேற்றுவேன் என்று சொல்லியிருக்கிறேன்.

அது மட்டுமல்ல, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று சொல்லி தான் நான் பதவியேற்றிக் கொண்டிருக்கிறேன். அந்த அடிப்படையில்தான் அவர்கள் வழியில் இருந்து ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறேன். ஆகவே எங்களுக்காக இல்லை உங்களுக்காக தான் இந்த ஆட்சி என்பதை மீண்டும் எடுத்துச் சொல்கிறேன்,’’

என்று வள்ளாலப்பட்டியில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.