தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Tamil Nadu Cabinet Meet Likely On March 9

TN Cabinet Meet: பட்ஜெட்டுக்கு முன்பு முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம்

Karthikeyan S HT Tamil
Feb 27, 2023 04:00 PM IST

தமிழக அமைச்சரவை கூட்டம் மார்ச் மாதம் 9-ந் தேதி கூடுகிறது.

அமைச்சரவை கூட்டம் - கோப்புபடம்
அமைச்சரவை கூட்டம் - கோப்புபடம்

ட்ரெண்டிங் செய்திகள்

இதற்காக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 9-ம் நடைபெறுகிறது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்படவுள்ளது. 

மகளிருக்கான உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளதால், தமிழக அரசு இந்த ஆண்டு தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட் மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தமிழக பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. 

எம்எல்ஏவாக இருந்த உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறையில் கூடுதல் சிறப்பு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்