தமிழ்நாடு பட்ஜெட்: போரூர்-பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை டிசம்பரில் தொடக்கம்! சுங்குச்சத்திரம் வரை நீட்டிக்கவும் திட்டம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  தமிழ்நாடு பட்ஜெட்: போரூர்-பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை டிசம்பரில் தொடக்கம்! சுங்குச்சத்திரம் வரை நீட்டிக்கவும் திட்டம்!

தமிழ்நாடு பட்ஜெட்: போரூர்-பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை டிசம்பரில் தொடக்கம்! சுங்குச்சத்திரம் வரை நீட்டிக்கவும் திட்டம்!

Kathiravan V HT Tamil
Published Mar 14, 2025 12:01 PM IST

பூந்தமல்லியில் இருந்து திருப்பெரும்புதூர் வழியாக சுங்குவார்சத்திரம் வரையிலான 27.9 கி.மீ. தூரத்திற்கு 8,779 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் நீட்டித்திடும் வகையில், விரிவான திட்ட அறிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

தமிழ்நாடு பட்ஜெட்: போரூர்-பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை டிசம்பரில் தொடக்கம்! சுங்குச்சத்திரம் வரை நீட்டிக்கவும் திட்டம்!
தமிழ்நாடு பட்ஜெட்: போரூர்-பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை டிசம்பரில் தொடக்கம்! சுங்குச்சத்திரம் வரை நீட்டிக்கவும் திட்டம்!

திமுக அரசின் 4வது பட்ஜெட்

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ளது. 2023 ஆம் ஆண்டில் நிதியமைச்சராக பதவியேற்ற பிறகு தென்னரசுவின் இரண்டாவது பட்ஜெட் தாக்கல் இதுவாகும். 2021ஆம் ஆண்டு பொறுப்பேற்ற திமுக தலைமையிலான அரசின் 4வது பட்ஜெட் இதுவாகும். நாளைய தினம் வேளாண் பட்ஜெட்டை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்கிறார். பட்ஜெட் மீதான விவாதம் மார்ச் 17-ம் தேதி தொடங்குகிறது.

மெட்ரோ ரயில் சேவை

மெட்ரோ ரயில் சேவை குறித்த அறிவிப்புகளை தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார். அதில், பெருகி வரும் நகரமயமாதலில் மிக முக்கியமான தேவையாக பேருந்து புறநகர் இரயில்வே மற்றும் மெட்ரோ இரயில் போக்குவரத்து போன்ற பல்வேறு வசதிகளை ஒருங்கிணைக்கும் முனையங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. அந்த வகையில் இவற்றை ஒன்றிணைக்கும் பன்முகப் போக்குவரத்து முனையம் ஒன்று. கிண்டியில் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பயணியருக்குத் தேவையான அனைத்து நவீன வசதிகளுடன் ஏற்படுத்தப்படும். சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியிலும் இதேபோன்று பன்முகப் போக்குவரத்து முனையம் ஒன்று. நவீன பயணியர் வசதிகளுடன் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

போரூர்-பூந்தமல்லி இடையே மெட்ரோ ரயில்

தற்போது நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வரும் மெட்ரோ இரயில் திட்டங்களிலேயே மிகப்பெரிய திட்டமாக 63246 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 119 கி.மீ. தூரத்திற்கு மூன்று வழித்தடங்களில் சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப்பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகின்றன. இவ்வழித்தடங்களில், பூந்தமல்லி முதல் போரூர் வரையிலான உயர் வழித்தடம் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும்.

கோவை, மதுரையில் மெட்ரோ 

கோவை மாநகரில் அவினாசி சாலை மற்றும் சத்தியமங்கலம் சாலை வழித்தடங்களில் 10740 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், மதுரை மாநகரில் திருமங்கலம் மற்றும் ஒத்தக்கடை பகுதிகளை இணைக்கும் விதமாக 11368 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் மெட்ரோ இரயில் திட்டத்திற்கென தயாரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கைகள் ஒன்றிய அரசின் மூலதனப் பங்களிப்பு பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஒன்றிய அரசின் அனுமதி கிடைத்தவுடன் இந்த இரு நகரங்களிலும் மெட்ரோ இரயில் அமைக்கப்படுவதற்கான பணி தொடங்கப்படும்.

மேலும் படிக்க:- தமிழ்நாடு பட்ஜெட்: ’ஈட்டிய விடுப்பு முதல் பத்திரப்பதிவு தள்ளுபடி வரை’ கடைசி நேரத்தில் தங்கம் தென்னரசு சொன்ன 4 அறிவிப்பு

சுங்குவார்சத்திரம் வரை மெட்ரோ ரயில் சேவை 

மேலும், சென்னை மெட்ரோ இரயில் வழித்தடத்தை சென்னை விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கத்திலுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் வரையிலான 15.46 கி.மீ. தூரத்திற்கு 9,335 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், கோயம்பேடு முதல் ஆவடி வழியாக பட்டாபிராம் வரையிலான 21.76 கி.மீ. தூரத்திற்கு 9,744 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் மற்றும் பூந்தமல்லியில் இருந்து திருப்பெரும்புதூர் வழியாக சுங்குவார்சத்திரம் வரையிலான 27.9 கி.மீ. தூரத்திற்கு 8,779 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் நீட்டித்திடும் வகையில், விரிவான திட்ட அறிக்கைகள் பெறப்பட்டுள்ளன. இவ்விரிவான திட்ட அறிக்கைகள் ஒன்றிய அரசின் மூலதனப் பங்களிப்பினைப் பெறுவதற்காக விரைவில் அனுப்பப்படும். தாம்பரம் முதல் வேளச்சேரி வழியாக கிண்டி வரை 21 கி.மீ. தூரத்திற்கும். கலங்கரை விளக்கத்திலிருந்து உயர் நீதிமன்றம் வரை 6 கி.மீ. தூரத்திற்கும் மெட்ரோ இரயில் வழித்தடம் நீட்டிப்பு செய்வதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்படும்.

ரோப்வே அமைக்க திட்டம் 

மாமல்லபுரம். உதகமண்டலம், கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலும் அப்பகுதிகளில் நிலவும் நுண்ணிய சுற்றுச்சூழல் தன்மையை கருத்தில் கொண்டும் ரோப்வே (Ropeway) உயர் போக்குவரத்து அமைப்பினை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகளை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மேற்கொள்ளும்.

மேலும் படிக்க:- தமிழ்நாடு பட்ஜெட் 2025: ’உரிமை தொகை கிடைக்கவில்லையா? கவலை வேண்டாம்!’ தங்கம் தென்னரசு வெளியிட்ட ’நச்’ அறிவிப்பு!

மித அதிவேக ரயில் சேவை 

தமிழ்நாட்டில் ஏற்பட்டு வரும் பரவலான பொருளாதார வளர்ச்சி மற்றும் விரிவான நகரமயமாக்கலைக் கருத்தில் கொண்டு, தலைநகர் புதுதில்லி. மீரட் நகரங்களுக்கிடையே மித அதிவேக இரயில் போக்குவரத்தை உருவாக்கி இயக்கப்படுவதைப் போன்று. மண்டல விரைவுப் (Regional Rapid Transit System-RRTS) தமிழ்நாட்டிலும் ஏற்படுத்துவதற்கான ஒன்றினை சாத்தியக்கூறுகள் ஆராயப்படும். மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் (Semi High Speed Railway) அமைப்பினை பின்வரும் வழித்தடங்களில் உருவாக்கிட சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தால் விரிவான சாத்தியக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

  • சென்னை செங்கல்பட்டு திண்டிவனம். விழுப்புரம் (167 கிமீ.)
  • சென்னை காஞ்சிபுரம் வேலூர் (140 கி.மீ)
  • கோயம்புத்தூர் திருப்பூர் ஈரோடு சேலம் (185 கி.மீ.)

இடையே மித அதிவேக ரயில் சேவை குறித்து ஆய்வு செய்யப்படும் என தெரிவித்தார்.

Kathiravan V

TwittereMail
காஞ்சி கதிரவன், 2016ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் உள்ளார். இயந்திரவியல் பட்டயப்படிப்பு, இளங்கலை அரசியல் அறிவியல், முதுகலை வணிக மேலாண்மை படித்து உள்ளார். தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அரசியல், நாட்டு நடப்பு, தொழில்முனைவு, வரலாறு, ஆன்மீகம் சார்ந்த செய்திகளில் பங்களித்து வருகிறார். அபுனைவு நூல்கள் வாசிப்பும், உரைகள் கேட்டலும், உரையாடல்களும் இவரது பொழுதுபோக்கு.
Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.