கள்ளச்சாராய மரணம்.. திமுக அரசின் திறமையற்ற ஆட்சி..சி.பி.ஐ. விசாரணை வேண்டும்.. அமித்ஷாவுக்கு அண்ணாமலை கடிதம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  கள்ளச்சாராய மரணம்.. திமுக அரசின் திறமையற்ற ஆட்சி..சி.பி.ஐ. விசாரணை வேண்டும்.. அமித்ஷாவுக்கு அண்ணாமலை கடிதம்!

கள்ளச்சாராய மரணம்.. திமுக அரசின் திறமையற்ற ஆட்சி..சி.பி.ஐ. விசாரணை வேண்டும்.. அமித்ஷாவுக்கு அண்ணாமலை கடிதம்!

Divya Sekar HT Tamil
Jun 21, 2024 07:43 AM IST

Kallakurichi Liquor Death : கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் குடித்து 43 பேர் உயிரிழப்பு; சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

கள்ளச்சாராய மரணம்.. திமுக அரசின் திறமையற்ற ஆட்சி..சி.பி.ஐ. விசாரணை வேண்டும்.. அமித்ஷாவுக்கு அண்ணாமலை கடிதம்!
கள்ளச்சாராய மரணம்.. திமுக அரசின் திறமையற்ற ஆட்சி..சி.பி.ஐ. விசாரணை வேண்டும்.. அமித்ஷாவுக்கு அண்ணாமலை கடிதம்!

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்வு

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் நேற்று முன்தினம் கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண்ணெரிச்சல், வயிற்று வலி, தலைவலி, உள்ளிட்டஉடல் உபாதைகள் ஏற்பட்டன. நேற்று முன்தினம் காலையில் இருந்து ஒவ்வொருவராக மருத்துவமனைக்கு வரத் தொடங்கினர்.

நேரம் செல்ல செல்ல தொடர்ச்சியாக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அடுத்தடுத்து ஒவ்வொருவராக சிகிச்சை பலனின்றி உயிரிழக்க தொடங்கினார். தற்போது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக உள்ளது.

மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மட்டும் மூன்று பேர் உயிரிழந்த நிலையில் 16 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அண்ணாமலை ஆறுதல்

இந்தச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினரை தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நேற்று காலை நேரடியாக சந்தித்து ஆறுதல் தெரிவித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் பா.ஜ.க. சார்பில் வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ.க. சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு இன்று கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. 

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம்

அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, “கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் குடித்து 39 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் 90-க்கும் மேற்பட்டோர் பல்வேறு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. கடந்த ஆண்டு மே மாதம் விழுப்புரம் மாவட்டம் மற்றும் செங்கல்பட்டு மரக்காணத்தில் இதே போன்ற சம்பவம் ஏற்பட்டு 23 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். 

தி.மு.க. அரசின் திறமையற்ற ஆட்சியால் கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகம் 60-க்கும் மேற்பட்ட உயிர்களை இழந்திருக்கிறது. தமிழகத்தில் கள்ளச்சாராயம் உற்பத்தி மற்றும் விற்பனை என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தி.மு.க.வைச்சேர்ந்தவர்களுக்கும் இதில் தொடர்பு உள்ளது என தகவல் தெரிய வந்துள்ளது. 

காவல்துறையினருக்கு தெரிந்தே இந்த விற்பனை சட்டவிரோதமாக நடைபெற்று வருகிறது. எனவே மாநில அரசு இந்த சம்பவத்தை விசாரித்தால் முழுமையான தகவல் தெரியவராது. இதனால் மத்திய அரசு தலையிட்டு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட கேட்டுக்கொள்கிறேன்” என கூறப்பட்டுள்ளது.

சிகிச்சை பெற்று வருபவர்களின் விவரம்

சேலம்

மொத்தம் 46 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 35 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி

மொத்தம் 94 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 69 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஜிப்மர்

மொத்தம் 19 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 16 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விழுப்புரம்

மொத்தம் 4 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர். 

இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்தம் : 163

இதில் உயிரிழந்தவர்கள் மொத்தம் : 43

தற்போது சிகிக்சைசையில் உள்ளவர்கள் : 120

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.