தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tn Assembly 2024: ’சிவன் பெயர் கொண்ட எம்.எல்.ஏ, பெருமாளுக்கு பஸ் கேட்கலாமா?' கலாய்த்த அமைச்சர்! பேரவையில் சிரிப்பலை!

TN Assembly 2024: ’சிவன் பெயர் கொண்ட எம்.எல்.ஏ, பெருமாளுக்கு பஸ் கேட்கலாமா?' கலாய்த்த அமைச்சர்! பேரவையில் சிரிப்பலை!

Kathiravan V HT Tamil
Jun 22, 2024 11:16 AM IST

Tamil Nadu Assembly: தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2ஆம் நாள் கூட்டம் இன்று தொடங்கியது. இன்றைய தினம், நகர்புற வளர்ச்சி மற்றும் குடிநீர் வழங்கல்கள் துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கால்நடை, மீன்வளம், பால் வளத்துறைகளின் மீதான மானியக்கோரிக்கை விவாதங்கள் நடைபெற உள்ளது.

TN Assembly 2024: ’சிவன் பெயர் கொண்ட எம்.எல்.ஏ, பெருமாளுக்கு பஸ் கேட்கலாமா?' கலாய்த்த அமைச்சர்! பேரவையில் சிரிப்பலை!
TN Assembly 2024: ’சிவன் பெயர் கொண்ட எம்.எல்.ஏ, பெருமாளுக்கு பஸ் கேட்கலாமா?' கலாய்த்த அமைச்சர்! பேரவையில் சிரிப்பலை!

’சிவன் பெயர் கொண்ட எம்.எல்.ஏ, பெருமாளுக்கு பேருந்து கேட்கலாமா?' என போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கேள்வி எழுப்பியதால் சட்டப்பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது. 

தமிழ்நாடு சட்டப் பேரவையின் நடப்பாண்டின் முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி அன்று ஆளுநர் உரை உடன் தொடங்கியது. பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்ற நிலையில், துறை ரீதியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்

இந்த நிலையில் துறைரீதியிலான மானியக் கோரிக்கை விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

சட்டப்பேரவையின் 2ஆம் நாள் கூட்டம்

தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2ஆம் நாள் கூட்டம் இன்று தொடங்கியது. இன்றைய தினம், நகர்புற வளர்ச்சி மற்றும் குடிநீர் வழங்கல்கள் துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கால்நடை, மீன்வளம், பால் வளத்துறைகளின் மீதான மானியக்கோரிக்கை விவாதங்கள் நடைபெற உள்ளது. அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ் ஆகியோர் மானியக் கோரிக்கை விவாதங்களுக்கு பதில் அளித்து, துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர். 

ட்ரெண்டிங் செய்திகள்

அதிமுக வெளிநடப்பு

இந்த நிலையில் காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் தொடங்கிய உடன் இன்றும் கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் ‘கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள்’ குறித்து விவாதிக்க கோரி அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.

திருப்பதிக்கு பேருந்து கேட்ட எம்.எல்.ஏ

கேள்வி நேரத்தின்போது, மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், “மேட்டூரில் இருந்து திருப்பதிக்கு செல்லும் பேருந்து நிறுத்தப்பட்டு விட்டது. மீண்டும் இந்த போக்குவரத்து சேவையை தொடங்க அமைச்சர் முன்வருவாரா?” என கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதில் அளித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர். மாவட்டத் தலைநகரான சேலத்தில் இருந்து திருப்பதிக்கு நிறைய பேருந்துகள் இயங்குகின்றன. இவர் பெயர் சதாசிவன், இவர் பெருமாளுக்கு பேருந்து கேட்கிறார். சூழ்நிலைக்கு ஏற்ப ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். அமைச்சர் சிவசங்கரின் இந்த பேச்சால் சட்டப்பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது. 

மலை கிராமத்திற்கு பேருந்து சேவை கேட்ட எம்.எல்.ஏ

இதனை தொடர்ந்து அணைக்கட்டு தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், தனது தொகுதிக்கு உட்பட்ட பீஞ்சமந்தை என்ற மலைக்கிராமத்திற்கு மினி பேருந்து சேவையை தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். 

இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் சிவசங்கர், ”அந்த மலை கிராமத்தில் புதிய சாலை திறக்கும் போதே இந்த கோரிக்கையை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் என்னிடம் வைத்து இருந்தார். இந்த பகுதியில் ‘கட் சேஸ்’ ரக பேருந்துகள்தான் இயக்க முடியும். அந்த பேருந்துகள் வாங்கும்போது, முன்னுரிமை கொடுத்து செயல்படுத்தப்படும் என பதில் அளித்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews 

Google News: https://bit.ly/3onGqm9 

இந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

https://www.whatsapp.com/channel/0029Va9NEUA7IUYU4eBTc81v