தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Tamil Latest News Updates On June 1

இன்றைய முக்கிய செய்திகள்

Tamil Latest News Updates: சேலம் பட்டாசு குடோனில் விபத்து: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

04:55 PM ISTHT Tamil Desk
  • Share on Facebook
04:55 PM IST

இன்றைய (ஜூன் 1) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப்பக்கத்தில் இணைந்திருங்கள்

Thu, 01 Jun 202302:28 PM IST

முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

சேலம் மாவட்டம் எஸ்.கொல்லப்பட்டியில் உள்ள பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு நிவாரணத் தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Thu, 01 Jun 202302:28 PM IST

விளம்பரப் பலகை சரிந்து விழுந்து 3 பேர் பலி

கோவையில் கருமத்தம்பட்டியில் விளம்பரப் பலகை சரிந்து விழுந்து 3 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Thu, 01 Jun 202301:31 PM IST

ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு நிறைவு

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Thu, 01 Jun 202301:29 PM IST

சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்

தமிழக போலீஸ் அகாடமியின் இயக்குநராக சந்தீப் சாய் ரத்தோருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

Thu, 01 Jun 202301:28 PM IST

திமுகவினருக்கு ஜாமீன்

கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கிய புகாரில் கைதான 19 திமுகவினருக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்.

Thu, 01 Jun 202312:32 PM IST

பட்டாசு குடோனில் வெடி விபத்து

சேலம் அருகே எஸ்.கொல்லப்பட்டி அருகே செயல்பட்டுவந்த பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

Thu, 01 Jun 202312:31 PM IST

கடலில் வீசப்பட்ட ரூ.20 கோடி மதிப்புள்ள தங்கம் மீட்பு

இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டு கடலில் வீசப்பட்ட ரூ.20 கோடி மதிப்புள்ள தங்கம் மீட்கப்பட்டுள்ளது. இந்திய கடலோர காவல்படை, வருவாய் புலனாய்வு அதிகாரிகள் இணைந்து சோதனை நடத்தியபோது படகில் இருந்த தங்கத்தை கடத்தல் கும்பல் கடலில் வீசியுள்ளது. ஸ்கூபா டைவிங் வீரர்கள் வரவழைக்கப்பட்டு 2 நாட்கள் தேடுதலுக்கு பிறகு தங்கம் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக படகில் இருந்த நாசர், ஹமீது, ரவி உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Thu, 01 Jun 202312:30 PM IST

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு

சென்னை வந்துள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

Thu, 01 Jun 202311:48 AM IST

ராஜஸ்தானில் முதல் 100 யூனிட் மின்சாரத்திற்கு கட்டணமில்லை

ராஜஸ்தானில் முதல் 100 யூனிட் மின்சாரத்திற்கு இனி கட்டணமில்லை. 200 யூனிட் வரை நிலையான கட்டணம் மற்றும் தாமதக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படுவதாக முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.

Thu, 01 Jun 202310:52 AM IST

தப்பி ஓடிய விசாரணை கைதியை மடக்கி பிடித்த போலீசார்

பல்லடம் பேருந்து நிலையம் அருகே காவல்துறையினர் பிடியிலிருந்து தப்பி ஓடிய விசாரணை கைதி எதிரே வந்த மினி வேனில் மோதி கீழே விழுந்த நிலையில், காவல்துறையினர் கைதியை மடக்கி பிடித்தனர். 

Thu, 01 Jun 202310:26 AM IST

பயோமெட்ரிக் முறையில் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் - தமிழக அரசு

 

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பயோமெட்ரிக் முறையில் மட்டுமே விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படும் என தமிழ்நாடு உணவுப் பொருள் மற்றும் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

Thu, 01 Jun 202309:54 AM IST

எந்த  உத்தரவையும் அரசுகள் கேட்பதில்லை - நீதிபதிகள் கேள்வி

பல்வேறு வழக்குகளில் நீதிமன்ற உத்தரவுகளை மத்திய அரசு பின்பற்றுவதில்லை. ஆனால், தடை உத்தரவில் உடனடியாக மேல்முறையீட்டிற்கு வருகிறீர்கள். இதனை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Thu, 01 Jun 202309:50 AM IST

ஹாரிஸுக்கு விதிக்கப்பட்ட அபராதத்துக்கு இடைக்காலத் தடை

இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்தாத விவகாரத்தில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுக்கு விதிக்கப்பட்ட அபராதத்துக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

Thu, 01 Jun 202309:18 AM IST

சவுதி ப்ரோ லீஸ் கால்பந்து-அல்-இத்திஹாத் சாம்பியன்

சவுதி ப்ரோ லீக் கால்பந்து போட்டியில் அல்-இத்திஹாத் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இது ஒட்டுமொத்தமாக இந்த அணியின் 9வது சாம்பியன் பட்டம் ஆகும்.

Thu, 01 Jun 202308:32 AM IST

விமானப் படை பயிற்சி விமானம் விபத்து

கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் இந்திய விமானப்படை பயிற்சி விமானம் விபத்தில் சிக்கி எரிந்து சேதம் - விமானத்தில் இருந்த இரண்டு விமானிகள் பாராசூட் மூலமாக குதித்து உயிர் தப்பினர். வானில் பறந்து கொண்டிருந்தபோது தொழில் நுட்ப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Thu, 01 Jun 202308:29 AM IST

'டென்னிஸில் நடுவர்கள் வீடியோ ரீப்ளே பயன்படுத்த வேண்டும்'

சந்தேகத்திற்கு இடமான இடத்தில் நடுவர்கள் சரியான முடிவை எடுக்க உதவுவதற்கு வீடியோ ரீப்ளேக்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்று இங்கிலாந்து வீரர் கேமரூன் நோரி வலியுறுத்தினார்.

Thu, 01 Jun 202307:47 AM IST

முதல் நபர் நான் தான்-ராகுல்

அவதூறு வழக்கிற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்ட முதல் நபர் நான்தான் என ராகுல் காந்தி தெரிவித்தார்.

Thu, 01 Jun 202307:10 AM IST

பயிற்சி மருத்துவர்களுக்கு பாலியல் தொல்லை - மருத்துவர் சஸ்பெண்ட்

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவருக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் மருத்துவர் சஸ்பெண்ட். 

பாலியல் புகாரில் சிக்கிய மருத்துவர் ஜிதேந்திரனை பணியிடை நீக்கம் செய்து செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பயிற்சி மருத்துவர்கள் 50க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Thu, 01 Jun 202306:53 AM IST

கூடங்குளம் அணு மின்நிலையத்துக்கு BIS தரச்சான்று

கூடங்குளம் அணு மின்நிலையத்துக்கு தர நிர்ணய அமைவகம் BIS தரச்சான்று வழங்கியுள்ளது. இந்திய தர நிர்ணய அமைவகத்தின் இயக்குநர் ஜெனரல் பிரமோத் குமார் திவாரி தரசான்றை வழங்கினார்

Thu, 01 Jun 202305:31 AM IST

வாடிக்கையாளர்கலுக்கு மலிவான விலையில் தரமான பால் - பால்வள துறை அமைச்சர் மனோ தங்கராஜ்

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பால் கொள்முதல் நிலையங்களின் எண்ணிகை அதிகரிக்கப்படும். வாடிக்கையாளர்களுக்கு தரமான பால் மலிவான விலையில் கொடுப்பதற்கான திட்டங்கள் ஒவ்வொன்றாக தீட்டப்படும்!

நாள்தோறும் 45 லட்சம் லிட்டர் பால் கையாளும் திறன், இந்த ஆண்டு இறுதிக்குள் 70 லட்சம் லிட்டராக அதிகரிக்கப்படும் என்று பால்வள துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

Thu, 01 Jun 202305:00 AM IST

தங்கம் விலை குறைவு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.  5,620ஆக விற்பனை செய்யப்படுகிறது.

Thu, 01 Jun 202304:30 AM IST

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் பணி வாய்ப்பு அறிவிப்பு!

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு பதிவாளர் உட்பட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. தகுதி உள்ளவர்கள் ஜூலை 24ம் தேதி மாலை 4.30 மணிக்குள் விண்ணப்பங்களை அனுப்பலாம்!

Thu, 01 Jun 202304:15 AM IST

சீமான் திருமுருகன் காந்தி- ட்விட்டர் கணக்குகள் முடக்கம்.. முதல்வர் கண்டனம்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திரு. திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.

கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல.

ட்விட்டர் முடக்கத்தை விலக்கிச் சமூக வலைத்தளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும்!  என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். 

Thu, 01 Jun 202303:31 AM IST

இந்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி!

இந்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டத்திற்கு ஆதரவாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி குரல் கொடுத்துள்ளது. மல்யுத்த வீரர்கள் காவல்துறையால் மோசமாக நடத்தப்பட்டது கவலை அளிக்கிறது. பாரபட்சமின்றி சட்டப்படி நடவடிக்கை வேண்டும்  வலியுறுத்தி உள்ளது.

Thu, 01 Jun 202303:29 AM IST

திருச்சி விமான நிலையத்தில் தங்கம் பறிமுதல்!

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்தும், துபாயிலிருந்தும் திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த 3 பயணிகளிடமிருந்து, 1.2 கிலோ எடையுள்ள தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 

Thu, 01 Jun 202303:27 AM IST

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடக்கம்!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று காலை தொடங்கியது.

ஆன்லைனில் தொடங்கிய முதல் கட்ட பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூன் 10ம் தேதி வரை நடைபெறும்.

Thu, 01 Jun 202303:24 AM IST

ரூ.640 கோடி மதிப்பீட்டில் 58,000 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல்!

ஒன்றிய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலையில், ரூ.640 கோடி மதிப்பீட்டில் 58,000 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்வதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது 

கொள்முதல் செய்யப்படும் கொப்பரை தேங்காயை மத்திய அல்லது மாநில நிறுவன கிடங்குகளில் இருப்பு வைக்கவும் உத்தரவிட்டுள்ளது. 

Thu, 01 Jun 202303:22 AM IST

இன்று முதல் 5 நாட்கள் மிதமான மழை

"தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 5 நாட்கள் மிதமான மழை பெய்யக்கூடும்" என இந்திய வானிலை ஆய்வு மையம்  அறிவித்துள்ளது.

Thu, 01 Jun 202302:41 AM IST

கேரளாவில் பயணிகள் ரயிலுக்கு தீ வைப்பு

கேரளாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் தீ வைக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. நின்று கொண்டிருந்த ரயில் பெட்டி என்பதால் உயிரிழப்பு நல்வாய்ப்பாக தடுக்கப்பட்டுள்ளது.  இதே ரயிலுக்கு ஏற்கனவே தீ வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Thu, 01 Jun 202302:35 AM IST

மின்சார ரயில்கள் ரத்து

ஜூலை 1 ஆம் தேதி முதல் அடுத்தாண்டு ஜனவரி 31 ஆம் தேதி வரை (7 மாதங்கள்) சென்னை கடற்கரையில் இருந்து சேப்பாக்கம் வரை செல்லும் மின்சார ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது.

Thu, 01 Jun 202302:26 AM IST

நடிகர் மாதவன் பிறந்தநாள் இன்று

நடிகர் மாதவன் இன்று தனது 53 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

Thu, 01 Jun 202301:51 AM IST

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைவு

வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.84.50 குறைந்துள்ளது. ஒரு சிலிண்டர் ரூ.1,937க்கு விற்பனையாகிறது.

Thu, 01 Jun 202301:32 AM IST

குடிநீர் லாரிகள் வழக்கம் போல் இயங்கும்

சென்னையில் குடிநீர் லாரிகளின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் செய்யப்பட்டு உள்ளது . இதனால் இன்று வழக்கம் போல் குடிநீர் லாரிகள் இயக்கும் என தண்ணீர் லாரி உரிமையாளர்கள் அறிவித்து உள்ளது.

Thu, 01 Jun 202301:12 AM IST

இன்று நடக்கிறது மாமன்னன் இசை வெளியீட்டு விழா

நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெறுகிறது.

Thu, 01 Jun 202301:24 AM IST

376 வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

சென்னையில் இன்று (ஜூன் 1) பெட்ரோல், டீசல் விலை எந்த மாற்றமும் இல்லாமல், தொடர்ந்து 376 வது நாளாக அதே விலையில் விற்கப்படுகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24க்கும் விற்பனையாகிறது.

Thu, 01 Jun 202312:45 AM IST

தமிழ்நாடு முதலமைச்சரை சந்திக்க டெல்லி முதல்வர் சென்னை வருகை

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னையில் சந்திக்க உள்ளார்.