Condom Sales: சொட்ட சொட்ட நனைந்த ஐபிஎல் இறுதி ஆட்டம்.. அதிர வைத்த ஸ்விக்கியின் காண்டம் விற்பனை ட்வீட்!
Swiggy: அதில், இன்றைக்கு நாங்கள் 2,423 ஆணுறைகளை டெலிவரி செய்துள்ளோம். இன்றிரவு களத்தில் 22 வீரர்கள் அல்ல, அதற்கும் மேல் நிறைய பேர் இருக்கிறார்கள் போல தெரிகிறது எனக் கூறி டியூரெக்ஸ் இந்தியா நிறுவனத்தை டேக் செய்துள்ளது
கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்ற ஐபிஎல் திருவிழா இனிதே முடிவடைந்துள்ளது. ஒவ்வொரு ஆட்டமும் ரசிகர்களுக்கு சிறந்த ட்ரீட்டாக அமைந்ததுடன், பிரியாணி விருந்துடனே அனைவரும் பார்த்து ரசித்துள்ளனர்.
ஐபிஎல் 2023 தொடர் முடிவடைந்துள்ள நிலையில், சிஎஸ்கே அணி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இதன்மூலம் அதிக முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை அணியுடன், சிஎஸ்கேவும் இணைந்துள்ளது.
முதல் முறையாக ஐபிஎல் இறுதிபோட்டி மழையால் தள்ளி வைக்கப்பட்டு ரிசர்வ் நாளில் நடைபெற்றது. இதையடுத்து ரிசர்வ் நாளிலும் மழை குறுக்கீடுக்கு இடையே பரபரப்பாக நடைபெற்ற இறுதிபோட்டியில் கடைசி பந்தில் சிஎஸ்கே அணி த்ரில் வெற்றி பெற்றது.
நேற்று முன்தினம் ஐபிஎல் போட்டிகளை குறிப்பிட்டு ஸ்விகி நிறுவனம் பதிவிட்ட ட்வீட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஸ்விகி நிறுவனம் பிரபல ஆணுறை (Condom) விற்பனை நிறுவனமான டியூரெக்ஸ் நிறுவனத்தை டேக் செய்து இந்த ட்வீட்டை பதிவிட்டுள்ளது.
அதில், இன்றைக்கு நாங்கள் 2,423 ஆணுறைகளை டெலிவரி செய்துள்ளோம். இன்றிரவு களத்தில் 22 வீரர்கள் அல்ல, அதற்கும் மேல் நிறைய பேர் இருக்கிறார்கள் போல தெரிகிறது எனக் கூறி டியூரெக்ஸ் இந்தியா நிறுவனத்தை டேக் செய்துள்ளது.
இந்த ட்வீட் டிரெண்டாகி அதிக லைக் மற்றும் கமெண்டுகளை பெற்று வருகிறது. இதுவரை 9 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த ட்வீட்டை பார்த்துள்ளனர், சுமார் 10,000 பேர் லைக் செய்துள்ளனர்.
அதேசமயம் 22 வீரர்களை பற்றி தெரியவில்லை, இந்த 2423 வீரர்களும் பாதுகாப்பாக விளையாடுகின்றார்கள் என்பது நன்றாக தெரிகிறது என ஒரு நபர் ஸ்விக்கியின் ட்வீட்டுக்கு நக்கலாக பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே பிரியாணி விருந்துடன் ஐபிஎல் போட்டிகளை ரசிகர்கள் பார்த்து ரசித்துள்ளனர். பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி செயலியான ஸ்விக்கியில் மட்டும் ஒரு நிமிடத்துக்கு 212 பிரியாணிகளை ஆர்டர் செய்தது குறித்த செய்திகள் வெளியானது.
இதுபற்றி ஸ்விக்கி நிறுவனம் மலைக்க வைக்கும் தகவலை வெளியிட்டுள்ளது. ஐபிஎல் ஒட்டு மொத்த சீசனில் மட்டும் 12 மில்லியன் பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டிருப்பதாகவும், நிமிடத்துக்கு 212 பிரியாணிகள் ஆர்டர்களை கஸ்டமர்களை செய்திருப்பதாகவும் ஸ்விக்கி தெரிவித்துள்ளது. இதன்மூலம், அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளில் பிரியாணி கோப்பையை வென்றிருப்பதாக" ஸ்விக்கி தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்த நிலையில் தற்போது காண்டம் விற்பனை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
டாபிக்ஸ்