’அமைச்சர் பதவி வேண்டுமா! சிறைக்கு போகாம இருக்க ஜாமீன் வேணுமா? செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
”அமைச்சர் பதவியா? சிறையா? அமைச்சர் பதவியில் நீடிக்க விரும்புகிறீர்களா? மறுபடியும் சிறைக்கு செல்லாமல் சுதந்திரமாக இருக்க விரும்புகிறீர்களா? என அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் கேள்வி”

’அமைச்சர் பதவி வேண்டுமா? ஜாமீன் வேண்டுமா?' செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!
"அமைச்சர் பதவியில் நீடிக்க விரும்புகிறீர்களா, அல்லது மறுபடியும் சிறைக்கு செல்லாமல் சுதந்திரமாக இருக்க விரும்புகிறீர்களா?" என்று சட்டவிரோத பணப்பறிமாற்ற தடை சட்ட வழக்கில் சிக்கி உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
செந்தில் பாலாஜி ஜாமீனுக்கு எதிராக மனு
செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி விஜயகுமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். செந்தில் பாலாஜி மீது போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக குற்றச்சாட்டு அடிப்படையில் வருமானவரி மற்றும் அமலாக்கத்துறை ரெய்டு மேற்கொண்டது.
