’அடுத்த தேர்தலில் ஜெயித்தாலும் செந்தில் பாலாஜி அமைச்சர் ஆக கூடாது!’ ED வாதம்! முடித்து வைத்த உச்சநீதிமன்றம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’அடுத்த தேர்தலில் ஜெயித்தாலும் செந்தில் பாலாஜி அமைச்சர் ஆக கூடாது!’ Ed வாதம்! முடித்து வைத்த உச்சநீதிமன்றம்!

’அடுத்த தேர்தலில் ஜெயித்தாலும் செந்தில் பாலாஜி அமைச்சர் ஆக கூடாது!’ ED வாதம்! முடித்து வைத்த உச்சநீதிமன்றம்!

Kathiravan V HT Tamil
Published Apr 28, 2025 03:37 PM IST

“அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றாலும் செந்தில் பாலாஜி அமைச்சராக பொறுப்பேற்கக் கூடாது என அமலாக்கத்துறை வாதம்”

’அடுத்த தேர்தலில் ஜெயித்தாலும் செந்தில் பாலாஜி அமைச்சர் ஆக கூடாது!’ ED வாதம்! முடித்து வைத்த உச்சநீதிமன்றம்!
’அடுத்த தேர்தலில் ஜெயித்தாலும் செந்தில் பாலாஜி அமைச்சர் ஆக கூடாது!’ ED வாதம்! முடித்து வைத்த உச்சநீதிமன்றம்!

அமலாக்கத்துறை மற்றும் செந்தில் பாலாஜி தரப்பு வாதங்கள்

போக்குவரத்து துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி ஓராண்டுக்கு மேல் சிறையில் இருந்தார். அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், ஜாமீனை ரத்து செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

ஜாமீன் வேண்டுமா? அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா? என செந்தில் பாலாஜிக்கு கடந்த விசாரணையின் போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர். இந்த நிலையில் நேற்றைய தினம் தனது அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்றைய தினம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அமலாக்கத்துறை தரப்பில், மேலும் அவர் ஏதாவது ஒரு பதவியில் இருந்தால் சாட்சியங்களை கலைக்க வாய்ப்பு உள்ளதாகவும் அமலாக்கத்துறை கூறியது. சிறையில் இருந்தபோதும் கூட இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தார் என்றால் அவர் எத்தகைய அதிகாரம் பெற்ற நபர் என்பதை இதில் புரிந்து கொள்ளலாம் என வாதங்கள் முன் வைக்கப்பட்டன.

செந்தில் பாலாஜி தரப்பில், மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி, “15 ஆண்டுகள் வழக்கு நடந்து கொண்டிருந்தால், அதுவரை அமைச்சர் பதவியை ஏற்க முடியாமல் இருக்க வேண்டுமா?, அமைச்சராக முடியாது என உச்சநீதிமன்றம் கூற அதிகாரம் இல்லை,” என வாதிட்டார். முந்தைய விசாரணையில், “பதவியா அல்லது ஜாமீனா?” என நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், செந்தில் பாலாஜி பதவியை ராஜினாமா செய்து பதிலளித்து உள்ளதாகவும் வாதங்கள் முன் வைக்கப்பட்டன.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு

ஆளுநர் மாளிகையின் செய்திக்குறிப்பை ஏற்று, உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை முடித்து வைத்தது. அமலாக்கத்துறை, “டெல்லி முதல்வர் தலைமைச் செயலகம் செல்லக் கூடாது என உத்தரவிடப்பட்டது போல, செந்தில் பாலாஜிக்கும் உத்தரவிட வேண்டும்,” என கோரியது. இருப்பினும், செந்தில் பாலாஜி பதவி விலகியதால், இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டு உள்ளது.