Tungsten Protest : ‘டங்ஸ்டன் போராட்டம்.. DYFI மாவட்ட செயலாளரை குறி வைப்பது ஏன்?’ சு.வெங்கடேசன் எம்.பி., கேள்வி!
Tungsten Protest : ‘சமீபத்தில் DYFI நடத்திய மூன்று நாட்கள் நடைபயணத்தின் பொறுப்பாளர் அவர். ஆயிரக் கணக்கான மக்கள் கூடிய பேரணியில் அவரை மட்டும் வலுக்கட்டாயமாகத் தாக்கி, இழுத்துச் சென்று காவல் துறை காரில் ஏற்ற முயன்றது ஏன்?’
Tungsten Protest : மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர், சு.வெங்கடேசன், தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பதிவு இதோ:
‘‘டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஏகமனதாக கொண்டுவரப்பட்ட தனித்தீர்மானத்தை முழுமனதாக மேலூர் மக்கள் வரவேற்றுள்ளனர். நேற்று நடந்த பேரணியுமே இத்திட்டத்தை முழுமையாக ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையோடுதான் நடந்தது.
சமீபத்தில் DYFI நடத்திய மூன்று நாட்கள் நடைபயணத்தின் பொறுப்பாளர் அவர். ஆயிரக் கணக்கான மக்கள் கூடிய பேரணியில் அவரை மட்டும் வலுக்கட்டாயமாகத் தாக்கி, இழுத்துச் சென்று காவல் துறை காரில் ஏற்ற முயன்றது ஏன்?
அங்கிருக்கும் மக்கள் தமிழரசனை காவல்துறையிடமிருந்து மீட்டிருக்காவிட்டால் காவல்துறை தமிழரசனை என்ன செய்திருக்கும் என்கிற கேள்விகள் எழுகின்றன. காவல் துறையின் இந்த அராஜக நடவடிக்கை கண்டனத்திற்குரியது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்,’’
என்று சு.வெங்கடேசன் எம்.பி., தன்னுடை எக்ஸ் தளத்தில் கேள்வி எழுப்பி, பதிலளித்துள்ளார்.