Schools Leave: மாணவர்களே ஜாலிதான்! திருவள்ளுரில் பள்ளி கல்லூரிகளுக்கு டிச.4 விடுமுறை!
திருவள்ளூர் பள்ளி கல்லூரிகளுக்கு வரும் டிச.4ம்தேதி திங்கள் கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்திற்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பள்ளி கல்லூரிக்கு ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார்.
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மிக்ஜம் புயல் வரும் டிசம்பர் 5ஆம் தேதி முற்பகல் ஆந்திர மாநிலம் நெல்லூர் மசூதி பட்டினம் இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் நான்காம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் அதிக கன மழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கும் பள்ளி கல்லூரிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே புதுச்சேரியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு திங்கட்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்