தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Storm Warning Cage Hoisted In 9 Ports

உஷார் மக்களே.. நாளை முதல் வரும் 5ஆம் தேதி வரை ஆரஞ்சு அலர்ட்.. 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

Divya Sekar HT Tamil
Dec 01, 2023 11:38 AM IST

சென்னை, நாகை, காரைக்கால், கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

ட்ரெண்டிங் செய்திகள்

இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய 9 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் பிற்பகல் ஒரு மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து, வரும் 3 ஆம் தேதி தென்மேற்கு வங்க கடல் பகுதியில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது.

4ஆம் தேதி மாலை வட தமிழகம், தெற்கு ஆந்திரா கடலோர பகுதியில், சென்னைக்கும் மசிலிபட்டினத்திற்கும் இடையே புயலாக கரையை கடக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டுக்கு நாளை முதல் வரும் 5ஆம் தேதி வரை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரும் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் வட தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக புயல் எச்சரிக்கை எதிரொலியாக 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

சென்னை, நாகை, காரைக்கால், கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்