Schools Leave:புயல் எதிரொலி..எந்தெந்த மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு டிச. 4 விடுமுறை தெரியுமா?
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் செயல்படும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். ஏற்கனவே புயல் காரணமாக டிசம்பர் நான்காம் தேதி புதுச்சேரி மாநிலத்தின் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் நாளை மறுநாள் புயலாக மாறி டிசம்பர் 5ஆம் தேதி முற்பகலில் கடைய கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் செயல்படும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
ஏற்கனவே புயல் காரணமாக டிசம்பர் நான்காம் தேதி புதுச்சேரி மாநிலத்தின் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மிக் மிக்ஜம் புயல் டிசம்பர் 5ஆம் தேதி முற்பகலில் கரையை கடக்கும் என்றும் தற்பொழுது சென்னையிலிருந்து 450 கிலோமீட்டர் தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூர் மசூலிப்பட்டினம் இடையே டிசம்பர் 5ஆம் தேதி முற்பகலில் மிக்ஜம் புயல் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் இன்று அனேக இடங்களிலும் புதுவை காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கடலூர் மயிலாடுதுறை நாகை திருவாரூர் தஞ்சாவூர் புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் தற்போது பலத்த காற்றுடன் கூடிய மழை பரவலாக பெய்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்
டாபிக்ஸ்