Tamil News  /  Tamilnadu  /  Stone Pelting On Kaveri Express Train In Chennai

Chennai : சென்னையில் பகீர்.. காவேரி எக்ஸ்பிரஸ் ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு.. போலீசார் விசாரணை!

Divya Sekar HT Tamil
Jan 06, 2024 11:16 AM IST

சென்னையில் ரயில் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவேரி எக்ஸ்பிரஸ் ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு
காவேரி எக்ஸ்பிரஸ் ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு

ட்ரெண்டிங் செய்திகள்

காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலானது கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து சென்னை சென்டிரல் ரயில் நிலையம் வரை இயக்கப்படும் தினசரி ரயில் ஆகும். இந்த ரயில் சென்னை, திருவொற்றியூர் அருகே சென்ட்ரல் நோக்கி சென்று கொண்டிருந்த போது மர்மநபர்கள் ரயில் மீது கல்வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

இந்த ரயில் நேற்று மைசூரில் இருந்து புறப்பட்டு சென்னை சென்டிரல் நோக்கி வந்து கொண்டிருந்தது. ரயிலானது திருவொற்றியூர் அருகே வந்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவத்தில் 7 ரெயில் பெட்டிகளின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்துள்ளன. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாரும் பாதிக்கப்படவில்லை.

ரயிலில் இருந்த பயணிகள் அலறியுள்ளனர். இந்த பெட்டிகளில் பயணிகள் யாரும் இல்லாததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. ரயில், செண்ட்ரல் ரயில் நிலையம் வந்ததும், அதிகாரிகள் ரயிலை ஆய்வு செய்தனர்.

7 ரயில் பெட்டிகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய நபர்கள் மீது சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வலை வீசி தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவத்தினால் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்படவில்லை. ரயிலானது சென்டிரல் ரயில் நிலையம் வந்து சேர்ந்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்