Breaking News: பெண்ணை பின் தொடர்ந்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை! புதிய மசோதாவை தாக்கல் செய்தார் முதலமைச்சர்!
பெண்ணை பின் தொடர்ந்தால் 5 ஆண்டுகள் வரை சிறை, பிணையில் வெளியில் வர முடியாதபடி வழிவகை செய்யும் சட்டத்திருத்த மசோதாவை தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
பெண்ணை பின் தொடர்ந்தால் 5 ஆண்டுகள் வரை சிறை, பிணையில் வெளியில் வர முடியாதபடி வழிவகை செய்யும் சட்டத்திருத்த மசோதாவை தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
பெண்களின் சமூக பங்களிப்பு அதிகமாகி வருகிறது. பெண்கள் அதிகம் வேலைக்கு செல்லும் மாநிலமாக தமிழகம் உள்ளது. பெண்கள் அதிகமாக சமூக பங்களிப்பு தரும் மாநிலமாக தமிழ்நாடு வளர்ந்து வருகிறது. அதே நேரத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்கள் மீது தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை எடுத்து சட்டப்படி கிடைக்க வேண்டிய தண்டனைகளை வாங்கி தருவதில் அரசு செயல்பட்டு வருகிறது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அரசு அடக்கி வருகிறது. 86 விழுக்காட்டுக்கு மேலான வழக்குகளில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கையை அரசு தாக்கல் செய்து உள்ளது. பள்ளி, கல்லூரி, பொது இடங்களில் 2.39 லட்சம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அரசு நடத்தி உள்ளது. சத்தியா என்ற பெண் ரயிலில் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை கொடுத்து இருப்பதும் இந்த அரசுதான்.
இது தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைத்து பெண்கள் பாதுகாப்பையும் உறுதி செய்யும் அரசாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்கொடுமை மன்னிக்க முடியாது குற்றம். இத்தகைய செயல்களில் ஈடுபட முனைவோருக்கான கடும் எச்சரியாக சட்டம் இருக்க வேண்டும். பி.என்.எஸ் சட்டத்தின் கீழும், மாநில அரசு சட்டத்தின் கீழ் தண்டனைகள் வரையறுக்கப்பட்டாலும், இந்த தண்டனைகள் மேலும் கடுமையாக்க வேண்டும். இந்த அடிப்படையில் இத்தகைய குற்றங்களுக்கான தண்டனையை மேலும் கடுமையாக்க பெண்ணிற்கு துன்பம் விளைவித்தலை தடை செய்யும் சட்டத்திருத்தத்திற்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என முதலமைச்சர் கூறினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த சட்டத்திருத்தம் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நாளை சட்டப்பேரவையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.