‘கிடப்பில் போட்ட ஸ்டாலின்.. அதிமுக ஆட்சி வந்ததும் மதுரையில் எய்ம்ஸ்..’ இபிஎஸ் உறுதி!
‘எய்ம்ஸ் மருத்துவமனை அம்மா முதல்வராக இருக்கும்போது கோரிக்கை வைத்தார்கள். திருமங்கலம் தொகுதியில்தான் எய்ம்ஸ் வருகிறது. நான் முதல்வராக இருக்கும்போது மோடி அடிக்கல் நாட்டினார், திமுக அரசு அழுத்தம் கொடுத்து பணிகளை முடிக்க முடியவில்லை. அதிமுக அரசு அமைந்ததும் பணிகளை விரைவுபடுத்தி எய்ம்ஸ் திறக்கப்படும்’

‘கிடப்பில் போட்ட ஸ்டாலின்.. அதிமுக ஆட்சி வந்ததும் மதுரையில் எய்ம்ஸ்..’ இபிஎஸ் உறுதி!
மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் நான்காம் கட்ட எழுச்சிப்பயணம் தொடங்கியிருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று திருப்பரங்குன்றம் தொகுதியை அடுத்து திருமங்கலம் தொகுதியில் குன்றத்தூர் அருகேயுள்ள அம்மா கோயில் முன்பு கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது அவர், ‘’அதிமுகவின் கோட்டை இந்த தொகுதி. விவசாயிகளுடைய வாழ்வில் ஏற்றம் கொடுத்த அரசு அதிமுக அரசு. விவசாயத் தொழிலாளிகளுக்கு பசுமை வீடுகள், ஆடுகள், கறவை மாடுகள், கோழிகள் கொடுத்தோம். உழவர் பாதுகாப்புத் திட்டம் கொடுத்தோம், முதியோர் உதவித் திட்டம் மூலம் லட்சக்கணக்கான முதியோருக்கு மாத உதவித்தொகை கொடுத்தோம்.
அதிமுக ஆட்சிக்கு வந்ததும் விவசாய தொழிலாளி, ஏழைகள், தாழ்த்தப்பட்டோருக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும்.
