’இளையராஜா அர்த்தமண்டபத்தில் இருந்து வெளியேறியது ஏன்?’ ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் நிர்வாகம் விளக்கம்
ஆண்டாள் கோயிலில் கருவறைக்கு முன்பு உள்ள அர்த்த மண்டபம் பகுதியையும் கருவறை போன்றே பாவித்து வருகிறோம். அர்த்த மண்டபத்திற்குள் ஜீயர்களை தவிர பொதுமக்களுக்கு அனுமதி தரப்படுவது இல்லை. சம்பவத்தன்று ஜீயர் உடன் இளையராஜாவும் அர்த்த மண்டபத்தில் தவறுதலாக நுழைந்து உளளார் என கோயில் நிர்வாகம் விளக்கம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் அர்த்த மண்டபத்தில் நுழைய யாருக்கும் அனுமதி கிடையாது, அதன் அடிப்படையிலேயே இளையராஜாவை தடுத்து நிறுத்தியதாகவும் கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்து உள்ளது.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலில் உள்ள அர்த்த மண்டபத்திற்குள் செல்ல முயன்ற இளையராஜாவை வெளியே அனுப்பியதாக சர்ச்சை எழுந்த நிலையில், இது கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்து உள்ளது.
ஆண்டாள் கோயிலில் கருவறைக்கு முன்பு உள்ள அர்த்த மண்டபம் பகுதியையும் கருவறை போன்றே பாவித்து வருகிறோம். அர்த்த மண்டபத்திற்குள் ஜீயர்களை தவிர பொதுமக்களுக்கு அனுமதி தரப்படுவது இல்லை. சம்பவத்தன்று ஜீயர் உடன் இளையராஜாவும் அர்த்த மண்டபத்தில் தவறுதலாக நுழைந்து உள்ளனர்.
கோயில் நிர்வாகம் தரப்பில் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இளையராஜா வெளியே சென்றனர். இளையராஜாவுக்கு கோயில் யானையை வைத்தோ, வெண்குடை பிடித்தோ வரவேற்பு அளிக்கப்படவில்லை என ஆண்டாள் கோயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
டாபிக்ஸ்