தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Sri Lanka Governor Senthil Thondaman Celebrated Pongal

Senthil Thondaman: டாப் 10 ஜல்லிக்கட்டு காளைகளுடன் அசத்தலாக பொங்கல் கொண்டாடிய இலங்கை ஆளுநர்!

Karthikeyan S HT Tamil
Jan 16, 2024 07:22 PM IST

Sri Lanka Governor: ஜல்லிக்கட்டு போட்டிகளில் களம்கண்டு பிரபலமான 10 காளைகளுடன் இலங்கை ஆளுநர் செந்தில் தொண்டமான் தனது பூர்வீக கிராமத்தில் இன்று (ஜன.16) மாட்டு பொங்கலை கொண்டாடினார்.

இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்.
இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்.

ட்ரெண்டிங் செய்திகள்

சிவகங்கை மாவட்டம், சொக்காதபுரம் அருகே ஜல்லிக்கட்டு போட்டிகளில் களம்கண்டு பிரபலமான 10 காளைகளுடன் இலங்கை ஆளுநர் செந்தில் தொண்டமான் தனது பூர்வீக கிராமத்தில் இன்று (ஜன.16) மாட்டு பொங்கலை கொண்டாடினார். சிவகங்கை மாவட்டம், சொக்காதபுரம் அருகேவுள்ள கத்தப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் தொண்டமான். இவர் இலங்கை நாட்டில் உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணத்தின் தற்போதைய ஆளுநராகவும் பதவி வகித்து வருகிறார்.

தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட செந்தில் தொண்டமான் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர் என்பதால் இவரிடம் தற்சமயம் தமிழ்கத்தின் மிக பிரபலமான பேட்ட காளி, செம்மாலு, காங்கேயம், புலி, பாகுபலி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட காளைகள் உள்ளன. இந்த காளைகள் அனைத்தும் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர், சிராவயம், கண்டிப்பட்டி உள்ளிட்ட பிரபலமான ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்ற காளைகளாகும்.

இந்நிலையில் இன்று மாட்டு பொங்கல் என்பதால் அவரது பூர்வீக கிராமத்தில் பொது மக்களுடன் இனைந்து அந்த காளைகள் அனைத்தையும் வைத்து பொங்கல் கொண்டாடினர். இதில் காளைகள் அனைத்திற்கும் சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் செய்து பாரம்பரிய வழக்கப்படி பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் செந்தில் தொண்டமான், ஜல்லிக்கட்டு போட்டியை சர்வதேசாக போட்டியாக மாற்றும் முயற்சியாகவே இந்த ஆண்டு இலங்கையில் ஜல்லிக்கட்டு நடந்தப்பட்டுள்ளது. இலங்கை சென்ற நமது தமிழர்கள் அப்போது தங்களது உடைகளையும், கலாச்சாரங்களை மட்டுமே எடுத்துச் சென்றனர் என்று கூறியவர், தமிழர்களின் கலாச்சாரத்தை இலங்கையில், நமது தமிழர்கள் வளர்த்தும், பாதுகாத்தும் வருவதாகவும் தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

WhatsApp channel

டாபிக்ஸ்