’முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம்’ ஈபிஎஸ் அதிரடி!
”தனது சொந்த அக்காவிடம் நகை மற்றும் 17 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை மோசடி செய்ததாக குற்றச்சாட்டில் சென்னை விமான நிலையத்தில் நேற்று கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை”

மோசடி புகாரில் சிக்கிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதனின் மகனும், தூத்துக்குடி மாநகராட்சி 59-வது வார்டு கவுன்சிலருமான எஸ்.பி.எஸ். ராஜா, அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அவர் நீக்கப்பட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கை, ராஜா தனது சொந்த அக்காவிடம் நகை மற்றும் 17 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை மோசடி செய்ததாக குற்றச்சாட்டில் சென்னை விமான நிலையத்தில் நேற்று கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பின்னணி
ராஜா மற்றும் அவரது மனைவி அனுஷா ஆகியோர், பண மோசடி புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். வெளிநாடு தப்பிச் செல்ல முயன்றபோது சென்னை விமான நிலையத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மோசடி வழக்கு தொடர்பாக, அதிமுக தலைமை உடனடியாக நடவடிக்கை எடுத்து, ராஜாவை கட்சியிலிருந்து நீக்கியுள்ளது.