மாணவி சொன்ன யார் அந்த சார்! ஞானசேகரனை காவலில் எடுக்கும் சிறப்பு புலனாய்வு குழு!
இதனை தொடர்ந்து ஞான சேகரன் எத்தனை பெண்களிடம் இதுபோல் செயல்பட்டு இருக்கிறார் என்பதையும் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை நடத்த உள்ளது.
![மாணவி சொன்ன யார் அந்த சார்! ஞானசேகரனை காவலில் எடுக்கும் சிறப்பு புலனாய்வு குழு! மாணவி சொன்ன யார் அந்த சார்! ஞானசேகரனை காவலில் எடுக்கும் சிறப்பு புலனாய்வு குழு!](https://images.hindustantimes.com/tamil/img/2025/01/04/550x309/YAAR_ANDDHA_SAR_ANNA_1735977703211_1735977709128.png)
யார் அந்த சார்? என்பதை அண்ணா பல்கலைக்கழக மாணவி உறுதிப்படுத்திய நிலையில் ஞானசேகரனை காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
யார் அந்த சார்?
அண்ணா பல்கலைக்கழக சம்பவம் குறித்து விசாரிக்க, 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தியது. அதில், ஞானசேகர் சார் என்று ஒருவரிடம் பேசியதாகவும், மிரட்டிவிட்டு வந்துவிடுவதாக கூறியதாகவும் மாணவி தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சார் என்ற பெயரில் ஒருவரிடம் ஞானசேகர் பேசியதை உறுதி செய்து உள்ளனர்.
ஞானசேகரனை காவலில் எடுத்து விசாரிக்க திட்டம்
ஞானசேகரனின் செல்போனில் அழிக்கப்பட்ட வீடியோக்களை சைபர் ஆய்வு மூலம் திரும்ப பெறப்பட்டது. அதில் வேறு சில ஆபாச வீடியோக்களும் கைப்பற்றப்பட்டு உள்ளது. அதில் திருப்பூரை சேர்ந்த குற்றவழக்குகளில் தொடர்புடைய நபரும் ஞானசேகர் உடன் இருப்பது தெரிய வந்து உள்ளது. இதனை தொடர்ந்து ஞான சேகரன் எத்தனை பெண்களிடம் இதுபோல் செயல்பட்டு இருக்கிறார் என்பதையும் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை நடத்த உள்ளது.
![Whats_app_banner Whats_app_banner](/_next/static/media/WhatsappChnlmob.efd407a6.png)
டாபிக்ஸ்