Amar Prasad Reddy: ’பெண் நிர்வாகி மண்டை உடைப்பு’ தலைமைவறைவான அமர்பிரசாத் ரெட்டியை பிடிக்க தனிப்படை அமைப்பு!
“ஆனால் அமர்பிரசாத் ரெட்டி தலைமறைவாக உள்ள நிலையில் ஏற்கெனவே அவரை பிடிக்க ஒரு தனிப்படை போலீசார் ஆந்திரா சென்றுள்ளது. இந்த நிலையில், தற்போது குஜராத், டெல்லி மும்பைக்கு மூன்று தனிப்படை போலீசார் விரைதுள்ளது”

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உடன் அமர்பிரசாத் ரெட்டி
பாஜக பெண் நிர்வாகியை தாக்கிய வழக்கில் அண்ணாமலையின் நண்பரும், பாஜக நிர்வாகியுமான அமர்பிரசாத் ரெட்டியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு அதிகம் ஊடகங்களில் தென்பட தொடங்கியவர் அமர்பிரசாத் ரெட்டி. திமுக அரசுக்கு எதிராக யூடியூப் சேனல்களில் வெளியாகும் அவரது அனல் பறக்கும் பேட்டிகள் பேசு பொருளாகின.
’முடிந்தால் என்னை தொட்டுப்பார்! என்னை தொட்டால் என்ன நடக்கும் தெரியுமா?’ என்பது போன்ற வீர வசனங்களை எல்லாம் பேசி அசத்திய அமர்பிரசாத் ரெட்டி பாஜக கொடி கம்பம் நட முயன்ற போது அரசு சொத்தை சேதப்படுத்திய வழக்கில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கைதாகி பின்னர் ஜாமீன் பெற்று விடுதலை ஆனார்.