Tamil News  /  Tamilnadu  /  Special Assistant Inspector Of Police, Who Cheated A Woman By Promising To Marry Him In Chennai, Has Been Fired
சென்னை போலீஸ் - கோப்புப்படம்
சென்னை போலீஸ் - கோப்புப்படம்

Police: பெண்ணிடம் திருமண ஆசை காட்டி குடும்பம் நடத்திய ட்ராபிக் போலீஸ்! டாட்டா காட்டியதால் பணிநீக்கம்

26 May 2023, 17:12 ISTKathiravan V
26 May 2023, 17:12 IST

கடந்த 02.06.2022 அன்று சிறப்பு உதவி ஆய்வாளர் ஆண்ரூஸ் கால்டுவெல் ஏற்கெனவே தற்காலிக பணிநீக்கம் (Suspension) செய்யப்பட்டு இருந்தார்.

திருமணம் செய்துக்கொள்வதாக கூறி பெண்ணை ஏமாற்றிய போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் மீது பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் சென்னை பெருநகர காவல், புனித தோமையர்மலை மோட்டார் வாகனப் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த ஆண்ரூஸ் கால்டுவெல் என்பவர் 2021 ஆம் ஆண்டு ஒரு பெண்ணிடம் தான் உயரதிகாரியாக உள்ளதாகவும், உனது குடும்ப பிரச்சனையை தீர்த்து வைப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி அந்த பெண்ணிடம் பழகி, தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி உடலளவில் துன்புறுத்தியதாகவும், பாதிக்கப்பட்ட பெண் 27.01.2022 அன்று பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

இந்நிலையில், சிறப்பு உதவி ஆய்வாளர் ஆண்ரூஸ் நீதிமன்றத்தில் முன்பிணை பெற்றதால், அச்சமயம் கைதாகவில்லை.

ஆனால், சிறப்பு உதவி ஆய்வாளர் ஆண்ரூஸ் கால்டுவெல், காவல்துறையில் பணிபுரிந்து கொண்டு ஒரு பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி மோசடி செய்ததும், இதனால் இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதும், இவ்வழக்கில் இருந்து தப்பிக்க தலைமையிடத்தில் தெரிவிக்காமல் நீதிமன்றத்தில் முன் பிணை பெற்றதும் அறிந்து, சிறப்பு உதவி ஆய்வாளர் மீது துறை ரீதியான விசாரணை மேற்கொண்டு. விசாரணையின் நடவடிக்கையாக, 02.06.2022 அன்று சிறப்பு உதவி ஆய்வாளர் ஆண்ரூஸ் கால்டுவெல் தற்காலிக பணிநீக்கம் (Suspension) செய்யப்பட்டார்.

மேலும், ஆண்ரூஸ் கால்டுவெல், பின்னர் நடைபெற்ற துறை ரீதியான விசாரணைகளுக்கு ஆஜராகாமல் வந்ததாலும், தலைமையிடத்திற்கு தெரிவிக்காமல் தலைலமையிடத்தை விட்டு சென்றதாலும், இவரது முன் பிணை உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டதாலும், மோட்டார் வாகனப் பிரிவு துணை ஆணையாளர் அவர்கள், துறை ரீதியின் விசாரணையின் முடிவாக, தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் ஆண்ரூஸ் கால்டுவெல் என்பவரை நிரந்தர பணிநீக்கம் செய்து (Removal From Service) 16.05.2023 அன்று உத்தரவிட்டார். அதன்பேரில், சிறப்பு உதவி ஆய்வாளர் ஆண்ரூஸ் காவல்துறை பணியிலிருந்து நிரந்தரமாக பணி நீக்கம் செய்யப்பட்டார்.

டாபிக்ஸ்