HBD TTV Dhinakaran: இக்கட்டில் இன்முகம்.. ஆளுங்கட்சியை ஓரங்கட்டிய சுயேச்சை எம்.எல்.ஏ.. அரசியலில் சாணக்யன் டிடிவி தினகரன்
தமிழ்நாட்டின் மிக முக்கிய அரசியல்வாதிகளில் ஒருவரான டிடிவி தினகரனின் பிறந்தநாள் குறித்த கட்டுரை..

டிடிவி தினகரன்
அம்மா மக்கள் முன்னேற்றக்கழக நிறுவனரும் அக்கட்சியின் பொதுச்செயலாளருமான டிடிவி தினகரனின் தனது 60ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
யார் இந்த டிடிவி தினகரன்? திருத்துறைப்பூண்டி திருவேங்கடம் விவேகானந்தரின் மகன் தினகரன் என்பதின் சுருக்கமே, டிடிவி தினகரன். இவர் 1963ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி விவேகானந்தம் மற்றும் வனிதாமணி ஆகிய தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். வனிதாமணியின் இளைய சகோதரி தான், வி.கே.சசிகலா. ஜெயலலிதாவின் தோழியான வி.கே.சசிகலாவின் அடியொற்றி அரசியலுக்குள் நுழைந்தவர், டிடிவி தினகரன்.
1999ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பெரியகுளம் நாடாளுமன்றத்தொகுதியில் அதிமுக சார்பில் நின்று, 3 லட்சத்து 3ஆயிரத்து 881 வாக்குகள் பெற்று, திமுக வேட்பாளர் கம்பம் செல்வந்திரனை தோற்கடித்தவர்.
