Speaker Appavu: ’என் தம்பி ஞானசேகரன்!’ சபாநாயகர் அப்பாவு பேச்சால் வெடித்தது சர்ச்சை! விளாசும் அண்ணாமலை!
திமுக நிர்வாகியாயிற்றே, பாசம் இருக்கத் தானே செய்யும். தன்னை அறியாமல் அதனை வெளிப்படுத்தியிருக்கிறார் சபாநாயகர் திரு. அப்பாவு. பாலியல் குற்றவாளியான திமுக நிர்வாகி ஞானசேகரனுக்குப் பக்கபலமாக இருந்த அந்த “சார்” யாரென்று, இன்று வரை காவல்துறை கண்டுபிடிக்கவில்லை என அண்ணாமலை விமர்சனம்

நூல் வெளியீட்டு விழாவில் ‘என் தம்பி ஞானசேகரன்’ என சபாநாயகர் அப்பாவு பேசும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது.
கடந்த டிசம்பர் மாதம் 23ஆம் தேதி அன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் ஞானசேகரன் என்பவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் திமுக நிர்வாகிகள் உடன் இருக்கும் புகைப்படமும் சமூகவலைத்தளங்களில் வைரல் ஆனது. சட்டப்பேரவையில் இது தொடர்பாக பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘ஞானசேகரன் திமுக அனுதாபிதானே தவிர, திமுக உறுப்பினர் கிடையாது’ என விளக்கம் அளித்து இருந்தார்.
இந்த நிலையில் பத்திரிக்கையாளர் நிரஞ்சன் எழுதிய ‘இந்தியா வென்றது’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய சபாநாயகர் அப்பாவுவின் பேச்சை பகிர்ந்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்து உள்ளார்.