’ஆளுநர் உரையை நேரலை செய்யாதது ஏன்?’ செய்தியாளர் கேள்விக்கு சபாநாயகர் அப்பாவு வினோத விளக்கம்!
ஆளுநர் பதவிக்காலம் நிறைவடைந்த பின் அந்த பதவியை தொடர்கிறாரே? என்ற கேள்விக்கு, அதை நீங்கள் ஐயாவிடம்தான் கேட்க வேண்டும். அவர்கள் விரும்பு உட்கார்ந்து இருக்கிறார் என தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேரலை வழங்கப்படாத விவகாரம் குறித்து தனக்கு தெரியாது என சபாநாயகர் அப்பாவு கூறி உள்ளார்.
அலுவல் ஆய்வுக்குழு கூட்டம்
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கிய நிலையில், தலைமை செயலகத்தில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்திற்கு பின்னர் வரும் ஜனவரி 11ஆம் தேதி வரை சட்டப்பேரவை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஜனவரி 7ஆம் தேதியான நாளைய தினம், ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ ஈவிகேஎஸ். இளங்கோவன், முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் ஆகியோர் மறைவு குறித்து இரங்கல் தீர்மானங்கள் கொண்டுவரப்பட உள்ளது.
ஜனவரி 8ஆம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடைபெறும் என்றும், அடுத்த நாட்களுக்கு நடைபெறும் விவாதத்திற்கு பின்னர் ஜனவரி 11ஆம் தேதி அன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான பதிலுரையும், பிற மசோதாக்களும் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சபாநாயகர் பேட்டி
அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்திற்கு பின்னர் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஆளுநர் உரையை நேரலையில் ஒளிபரப்பு செய்யாதது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், ”அங்க போட்ட தகராறுல என்ன டெக்னிக்கல் ப்ராப்ளம் ஏற்பட்டது என்று தெரியவில்லை நான் கேட்டு சொல்கிறேன். எனக்கு அதை பற்றி தெரியாது. நீங்கள் நேரலை செய்து வருகிறீர்கள் என்று நான் நினைத்துக் கொண்டு இருக்கிறேன்” என்றார்.
நாடாளுமன்ற நிகழ்வுகள் முழுமையாக நேரலை செய்யப்படுகிறதே, இங்கே ஏன் செய்ய முடியவில்லை என்ற கேள்விக்கு, ”நாங்கள்தான் காட்டிட்டு இருக்கோமே, பார்லிமண்டில் குடியரசுத் தலைவர் வாசிக்கமாட்டேன் என்று என்றைக்காவது சென்று உள்ளாரா?, சபை ஒத்திவைக்கப்படுகிறது என்று சொல்லி கிளம்பிவிடுவதால் அங்கு ஒரு பிரச்னையும் இல்லை. கடைசி நாளில் 50 மசோதாக்களை நிறைவேற்றுகின்றனர். அவர்களை நீங்களோ நானோ கேள்விக்கேட்க முடியுமா?, நமது ஜனநாயகம் நாடாளுமன்ற ஜனநாயகம், அதைத்தான் கவர்னரை செய்ய சொல்கிறோம் என சபாநாயகர் அப்பாவு கூறினார்.
ஆளுநர் பதவிக்காலம் நிறைவடைந்த பின் அந்த பதவியை தொடர்கிறாரே? என்ற கேள்விக்கு, அதை நீங்கள் ஐயாவிடம்தான் கேட்க வேண்டும். அவர்கள் விரும்பு உட்கார்ந்து இருக்கிறார் என தெரிவித்தார்.