SP Warns Thevar Fans: தேவர் குருபூஜைக்கு வரும் செல்பி புள்ளீங்கோளுக்கு வார்னிங்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Sp Warns Thevar Fans: தேவர் குருபூஜைக்கு வரும் செல்பி புள்ளீங்கோளுக்கு வார்னிங்!

SP Warns Thevar Fans: தேவர் குருபூஜைக்கு வரும் செல்பி புள்ளீங்கோளுக்கு வார்னிங்!

I Jayachandran HT Tamil
Oct 26, 2022 09:18 PM IST

தேவர் குருபூஜைக்கு வருவோர் காவல்துறை வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மருதுபாண்டியர் நினைவுநாள், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா
மருதுபாண்டியர் நினைவுநாள், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா

தேவர் ஜெயந்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மதுரை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது :

கடந்த மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற இமானுவேல் சேகரன் நினைவு நாளின் போது காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறிய வாகனங்கள் கண்காணிப்பு கேமராவின் அடிப்படையில் 25 நான்கு சக்கர வாகனங்கள், 6 இருச்சக்கர வாகனங்கள் என 31 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தேவர் குருபூஜைக்கு மதுரை மாவட்டத்தில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 100 வாடகை வாகனங்களில் காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட உள்ளனர்.

தேவர் ஜெயந்தி மற்றும் மருதுபாண்டியர்கள் நினைவுநாள் விழாவில் கலந்துகொள்ள செல்பவர்கள் மதுபோதையில் அதிவேகமாக வாகனங்களை இயக்கினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஓட்டுநரின் லைசென்ஸ் ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும்.

விழாவுக்குச் செல்லும் போது காவல்துறை வாகனங்களை தடுத்து நிறுத்தி இடையூறு செய்து அதனை சமூகவலைதளங்களில் பதிவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.