தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Southern Railway Has Announced That 44 Electric Trains Will Be Canceled In Chennai Tomorrow

Chennai Trains : சென்னை மக்கள் கவனத்திற்கு.. நாளை 44 மின்சார ரயில்கள் ரத்து.. இதோ முழு விவரம்!

Divya Sekar HT Tamil
Feb 10, 2024 09:30 AM IST

தண்டவாள பராமரிப்பு பணிகள் மற்றும் இன்ஜினியரிங் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் சென்னையில் நாளை 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை மின்சார ரயில்
சென்னை மின்சார ரயில்

ட்ரெண்டிங் செய்திகள்

ரத்து செய்யப்படும் ரயில்கள்

இதையொட்டி சென்னை கடற்கரை- தாம்பரம், கடற்கரை- செங்கல்பட்டு, தாம்பரம்- கடற்கரை, செங்கல்பட்டு- கடற்கரை, காஞ்சிபுரம்- கடற்கரை, திருமால்பூர்- கடற்கரை இடையே இயக்கப்படும் 44 மின்சார ரயில்கள் ரத்துசெய்யப்பட உள்ளது. 

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு காலை 10.30 காலை 10.40, காலை 10.50, காலை பதினொரு மணி, காலை 11.10, காலை 11.20, காலை 11:30, காலை 11.40, காலை 11.50, மதியம் 12 மணி, மதியம் 12.10, மதியம் 12.20, மதியம் 12.30, மதியம் 12.50 மதியம், ஒரு மணி மதியம் 1:15 மதியம், 1.30 மதியம், 1.45 மதியம் 2 மணி, 2:15, 2.30 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு காலை 10.05 காலை 10:15 காலை 10:25 காலை 10:45 காலை 10.55 காலை 11.25 காலை 11.35 மதியம் 12 மதியம் 12:15 மதியம் 12.45 மதியம் 1.30 1.45, மதியம் 2:15 மாலை 4.30 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கு காலை 9.40 10.55 11.30 மதியம் 1 மணி ஆகிய நேரங்களில் புறப்படும் மின்சார ரயில்களும், காலை 9:30 மணிக்கு காஞ்சிபுரம்-கடற்கரை இடையே இயக்கப்படும் மின்சார ரயிலும், 11.05 மணிக்கு திருமால்பூர்-கடற்கரை இடையே இயக்கப்படும் மின்சார ரயில் என மொத்தம் 44 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு ரயில்கள் இயக்கம்

தாம்பரம்-செங்கல்பட்டு இடையே மதியம் 11:55 மதியம் 12.45, மதியம் 3.25 மதியம் 3.45 மதியம் 2:20 2.25 ஆகிய நேரங்களிலும், மறுமார்க்கமாக செங்கல்பட்டு-தாம்பரம் இடையே காலை 9:30 காலை 9:40 காலை 10.59, காலை 11.05, 11.30 மதியம் 12 மதியம் 1 மணி ஆகிய நேரங்களில் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்