Tamil News  /  Tamilnadu  /  Southern Railway Announcement On Train Cancellation And New Unreserved Express Train

Train Cancelled: எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து, முன்பதிவில்லா சிறப்பு ரயில் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 09, 2024 08:15 AM IST

பராமரிப்பு பணிகள் காரணமாக சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே செய்தி குறிப்பு
தெற்கு ரயில்வே செய்தி குறிப்பு

ட்ரெண்டிங் செய்திகள்

திருநெல்வேலி - மேலப்பாளையம் இடையே இருவழிப்பாதை பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வரும் 11ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரையில் பல்வேறு எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யபடுகிறது.

வாஞ்சி மணியாச்சியிலிருந்து காலை 11.05 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்.06679) வரும் 1, 2, 5, 8, 9 ஆகிய தேதிகளில் 3 மணி நேரம் 15 நிமிடம் தாமதமாக மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு திருச்செந்தூர் செல்லும்.

கன்னியாகுமரியிலிருந்து மதியம் 2 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (16862) வரும் 12-ந்தேதி ஒரு மணி நேரம் தாமதமாக மதியம் 3 மணிக்கு புறப்பட்டு புதுச்சேரி செல்லும்.

முன்பதிவில்லா சிறப்பு எக்ஸ்பிரஸ்

நாகர்கோவிலில் இருந்து மாலை 6. 20 மணிக்கு புறப்பட்டு, திருவனந்தபுரம் செல்லும் முன்புதிவில்லா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்-06428) மார்ச் 1ஆம் தேதி முதல் கொச்சுவேலி வரை இயக்கப்படும்.

திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் முன்புதிவில்லா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் (06433) மார்ச் 2ஆம் தேதி முதல் கொச்சிவேலியில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp channel