தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  South Tamil Nadu And Western Ghats Districts May Receive Light To Moderate Rain At A Few Places

தமிழகத்தில் அடுத்த ஆறு நாட்களுக்கு எப்படி இருக்க போகிறது.. எங்கெல்லாம் வெயில் கொளுத்த போகுது.. இதோ பாருங்க!

Divya Sekar HT Tamil
Apr 04, 2024 06:47 AM IST

தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் (HT)

ட்ரெண்டிங் செய்திகள்

பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

திற்பரப்பு (கன்னியாகுமரி) 4, பாம்பன் (ராமநாதபுரம்), சுருளக்கோடு (கன்னியாகுமரி) தலா 3, சிற்றாறு-I (கன்னியாகுமரி) 2, தங்கச்சிமடம் (ராமநாதபுரம்), தொண்டி (ராமநாதபுரம்), முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி), முக்கடல் அணை (கன்னியாகுமரி) தலா 1.

அதிகபட்ச வெப்பநிலை :

தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை அநேக இடங்களில் இயல்பை விட அதிகமாகவும், வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் 2° – 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும் இருந்தது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பாகவும் இருந்தது.

உள் மாவட்ட சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 38° – 41° செல்சியஸ், கடலோரப் பகுதிகளில் 33° – 37° செல்சியஸ், மலைப்பகுதிகளில் 22° – 30° செல்சியஸ் பதிவாகியுள்ளது.

ஈரோட்டில் அதிகபட்ச வெப்பம் 41.2° செல்சியஸ், கரூர் பரமத்தியில் 40.5° செல்சியஸ், சேலம் 40.3° செல்சியஸ், வேலூரில் 40.1° செல்சியஸ், தருமபுரியில் 40.0° செல்சியஸ் பதிவாகியுள்ளது.

திருச்சி, கோயம்புத்தூர், மதுரை விமான நிலையம், நாமக்கல் மற்றும் திருத்தணி ஆகிய இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39° செல்சியஸ் முதல் 40° செல்சியஸ் வரை பதிவாகி யுள்ளது.

மதுரை நகரம், பாளையங்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய இடங்களில் 38° செல்சியஸ் முதல் 39° செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது.

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பாக இருந்தது. (மீனம்பாக்கம்: 36.5° செல்சியஸ் & நுங்கம்பாக்கம் : 35.2° செல்சியஸ்) பதிவாகியுள்ளது.

அடுத்த 6 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:

தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.

04.04.2024: தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

05.04.2024 முதல் 07.04.2024 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

08.04.2024 மற்றும் 09.04.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

04.04.2024 முதல் 07.04.2024 வரை: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் அதிகபட்ச வெப்பநிலை அடுத்த ஐந்து தினங்களில் 2° – 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

அடுத்த ஐந்து தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் 39° – 41° செல்சியஸ், உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 37° – 39° செல்சியஸ் மற்றும் கடலோரப்பகுதிகளில் 33° – 37° செல்சியஸ் இருக்கக்கூடும்.

ஈரப்பதம்: அடுத்த ஐந்து தினங்களில் காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50 % ஆகவும், மற்ற நேரங்களில் 40-70 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80 % ஆகவும் இருக்கக்கூடும்.

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல், தென் தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்