Vijay meets Governor: திமுகவுக்கு ஆப்பு வைக்கும் விஜய்! இன்று பிற்பகலில் ஆளுநரை சந்திக்கிறார்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Vijay Meets Governor: திமுகவுக்கு ஆப்பு வைக்கும் விஜய்! இன்று பிற்பகலில் ஆளுநரை சந்திக்கிறார்!

Vijay meets Governor: திமுகவுக்கு ஆப்பு வைக்கும் விஜய்! இன்று பிற்பகலில் ஆளுநரை சந்திக்கிறார்!

Kathiravan V HT Tamil
Dec 30, 2024 11:59 AM IST

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவாகரத்தில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

திமுகவுக்கு ஆப்பு வைக்கும் விஜய்! இன்று பிற்பகலில் ஆளுநரை சந்திக்கிறார்!
திமுகவுக்கு ஆப்பு வைக்கும் விஜய்! இன்று பிற்பகலில் ஆளுநரை சந்திக்கிறார்!

கைப்பட விஜய் எழுதிய கடிதம் 

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்றைய தினம் கைப்பட எழுதிய கடிதத்தில், அன்புத் தங்கைகளே! கல்வி வளாகம் முதற்கொண்டு, ஒவ்வொரு நாளும் தமிழத்தில் தாய்மார்கள், என்னருமைத் தங்கைகள், பெண் குழந்தைகள் என அனைத்துத் தரப்பு பெண்களுக்கும் எதிராக நடக்கும் சமூக அவலகங்கள் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டு அவலங்கள், பாலியல் குற்றங்கள் என்று பல்வேறு வன்கொடுமைகளைக் கண்டு தங்கள் அண்ணனாக மன அழுத்தத்திற்கும் சொல்லொணா வேதனைக்கும் ஆளாகிறேன். 

யாரிடம் உங்கள் பாதுகாப்பைக் கேட்பது? நம்மை ஆளும் ஆட்சியாளர்களை எத்தனை முறை கேட்டாலும் எந்தப் பயனுமில்லை என்பது தெரிந்ததே. அதற்காகவே இக்கடிதம்.

எல்லா சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாச் நிற்பேன். அண்ணனாகவும், அரணாகவும். எனவே எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள். பாதுகாப்பான தமிழகத்தைப் படைத்தே தீருவோம். அதற்கான உத்தரவாதத்தை நாம் அனைவரும் இணைந்தே விரைவில் சாத்தியப்படுத்துவோம் என எழுதி இருந்தார். 

ஆளுநரை சந்திக்கிறார்

இந்த நிலையில் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மனுகொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  

அண்ணா பல்கலைக்கழகத்தில் வன்கொடுமை விவகாரம் 

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தனது காதலருடன் மாணவி ஒருவர் பேசிக் கொண்டிருந்த நிலையில், அப்போது வந்த அடையாளம் தெரியாத நபர், இருவரையும் வீடியோ எடுத்ததுடன், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், ஞானசேகரன் என்பவரை கைது செய்தனர். அவர் தப்பியோடி முயன்ற போது கீழே விழுந்ததில் அவருக்கு கை மற்றும் கால்களில் எலும்பு முறிவும் ஏற்பட்டு உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நடத்திய விசாரணையில் மாணவியிடம் அத்துமீறும் முன்னர் ’சார்’ பெயரில் ஞானசேகரன் செல்போனில் ஒருவரிடம் பேசியதாக தெரிகிறது.

 

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.