தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Sources Say That The Central Narcotics Control Unit Seized The Documents From Jaffer Sadiq's House

Jaffer Sadiq Case: ஜாபர் சாதிக்கின் சத்துமாவு டெக்னிக்! வீட்டில் சிக்கிய வினோத பொருட்கள்! என்னென்ன தெரியுமா?

Kathiravan V HT Tamil
Mar 14, 2024 04:34 PM IST

”Jaffer Sadiq Case: ஜாபர் சாதிக்கிற்கு அந்த வீட்டை வாடகைக்கு விட்ட வீட்டின் உரிமையாளர் குறித்தும் அவரது பின்னணி குறித்தும் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அந்த வீட்டிற்கு வந்து சென்றவர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்”

ஜாபர் சாதிக்
ஜாபர் சாதிக்

ட்ரெண்டிங் செய்திகள்

ஜாபர் சாதிக்கின் கூட்டாளி கைது!

போதை பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக் கடந்த மார்ச் மாதம் 9ஆம் தேதி அன்று கைது செய்யப்படார். ஆவரது நெருங்கிய கூட்டாளியான தேனாம்பேட்டை சதா நேற்று (மார்ச் 13) கைது செய்யப்பட்டார். 

ஜாபர் சாதிக்கை 7 நாட்கள் காவலில் எடுத்து மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஜாபர் சாதிக் வீட்டில் சோதனை!

இந்த நிலையில் சென்னையில் ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

சத்துமாவு தயாரிப்பு!

பெருங்குடி பகுதியில் சத்துமாவு பாக்கெட் செய்து விற்பனை செய்வதாக கூறி ஜாபர் சாதிக் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார். இந்த வீட்டில் நடந்த சோதனையில் ஒரு பை மற்றும் ஒரு பெட்டி நிறைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கூறி உள்ளனர். 

மேலும் ஜாபர் சாதிக்கிற்கு அந்த வீட்டை வாடகைக்கு விட்ட வீட்டின் உரிமையாளர் குறித்தும் அவரது பின்னணி குறித்தும் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். மேலும்  அந்த வீட்டிற்கு வந்து சென்றவர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

போதைப் பொருள் கடத்தல் வழக்கின் பின்னணி என்ன?

இந்தியாவில் இருந்து தேங்காய் பவுடர், திராட்சை, உலர் பழங்கள் மற்றும் ஹெல்த் மிக்ஸ் பாக்கெட்டுகளில் மறைத்து வைத்து மெதம்பெடமைன் எனும் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படும் முக்கிய வேதிப்பொருளான சூடோபெட்ரின் சர்வதேச நாடுகளுக்கு கடத்தப்படுவதாக, டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து மேற்கு டெல்லியின் கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள குடோனில் கடந்த 15ஆம் தேதி போதைப் பொருள் தடுப்பு பிரிவினரும் டெல்லி போலீசாரும் சோதனை செய்தனர். இதில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 கிலோ வேதிப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர், விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கடத்தலில் மூளையாக செயல்பட்டு வந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த ஜாபர் சாதிக் என்பது அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்தது.

திமுக அயலக அணி நிர்வாகியாக இருந்த ஜாபர் சாதிக்கை அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து திமுக நீக்கியது.

ஜாபர் சாதிக்கை விசாரணைக்கு ஆஜராகுமாறு சென்னை சாந்தோமில் உள்ள அவரது வீட்டில் கடந்த மாதம் 23-ம் தேதி சம்மன் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. ஆனால், அவர் தலைமறைவானார். இதையடுத்து அவரது வீட்டில் சோதனை நடத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி வீட்டுக்கு சீல் வைத்தனர். மேலும் ஜாபர் சாதிக், வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க, விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸும் அனுப்பப்பட்டது.

இதற்கிடையில், தலைமறைவாக இருந்து வந்த ஜாபர் சாதிக் கடந்த மார்ச் 9 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். ஜாபர் சாதிக்கை கைது செய்த மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் 7 நாட்கள் காவலில் எடுத்து அவரிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் தான் ஜாபர் சாதிக்கின் கூட்டாளி சதா என்பவரை மார்ச் 13 அன்று சென்னையில் வைத்து மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ரூ.2,000 கோடி சூடோபெட்ரைன் என்ற போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

ட்விட்டர் : https://twitter.com/httamilnews 

பேஸ்புக்: https://www.facebook.com/HTTamilNews   

யூடியூப்: https://www.youtube.com/@httamil 

கூகுள் நியூஸ்:  https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்