Ramadoss vs Anbumani: பாமகவில் எந்த பதவியும் வேண்டாம்! ராமதாசை சந்தித்த பின் நடையை கட்டினார் முகுந்தன்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ramadoss Vs Anbumani: பாமகவில் எந்த பதவியும் வேண்டாம்! ராமதாசை சந்தித்த பின் நடையை கட்டினார் முகுந்தன்!

Ramadoss vs Anbumani: பாமகவில் எந்த பதவியும் வேண்டாம்! ராமதாசை சந்தித்த பின் நடையை கட்டினார் முகுந்தன்!

Kathiravan V HT Tamil
Dec 29, 2024 12:08 PM IST

Ramadoss vs Anbumani: என்னால் இருவருக்கும் எந்த பிரச்னையும் வரக்கூடாது. கட்சி இரண்டாக பிளவுபடக்கூடாது என்பதால் எனக்கு எந்த பதவியும் வேண்டாம் என மருத்துவர் ராமதாஸிடம் முகுந்தன் பரசுராமன் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

Ramadoss vs Anbumani: பாமகவில் எந்த பதவியும் வேண்டாம்! நடையை கட்டிய முகுந்தன்!
Ramadoss vs Anbumani: பாமகவில் எந்த பதவியும் வேண்டாம்! நடையை கட்டிய முகுந்தன்!

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸை, முகுந்தன் பரசுராமன் தனது குடும்பத்தினர் உடன் சந்தித்து பேசிஉள்ளார். என்னால் இருவருக்கும் எந்த பிரச்னையும் வரக்கூடாது. கட்சி இரண்டாக பிளவுபடக்கூடாது என்பதால் எனக்கு எந்த பதவியும் வேண்டாம் என தெரிவித்து உள்ளார். தொடர்ந்து பாமகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் தொடர்ந்து நீடிக்க விரும்புவதாகவும் முகுந்தன் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மேடையிலேயே கருத்து வேறுபாடு

பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் புதுச்சேரியில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய மருத்துவர் ராமதாஸ், பாமக இளைஞரணி தலைவராக முகுந்தன் பரசுராமனை அறிவித்தார். மருத்துவர் ராமதாசின் மூத்த மகளான காந்திமதியின் மகன் ஆவார். 

மருத்துவர் ராமதாஸின் இந்த அறிவிப்புக்கு மேடையிலேயே பாமக தலைவர் அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கட்சியில் சேர்ந்தே 4 மாதம்தான் ஆகிறது. அனுபவம் மிக்க ஒருவரை அப்பொறுப்பில் நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதை தொடர்ந்து பேசிய அவர், இது என் கட்சி, நான் சொல்வதைதான் கேட்க வேண்டும். விருப்பம் இருந்தால் இருங்கள், இல்லையென்றால் கிளம்புங்கள் என்ற பேசியது கூட்டத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. பனையூரில் தனி அலுவலகம் தொடங்கி உள்ளதாகவும், என்னை வந்து சந்திக்க விரும்புவர்கள் வந்து சந்திக்கலாம் என்றும் அன்புமணி கூறினார். 

ராமதாஸை சந்தித்த முகுந்தன்

பாமக பொதுக்குழுவில் நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் பேசுபொருள் ஆன நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸை, முகுந்தன் பரசுராமன் தனது குடும்பத்தினர் உடன் சந்தித்து பேசிஉள்ளார். என்னால் இருவருக்கும் எந்த பிரச்னையும் வரக்கூடாது. கட்சி இரண்டாக பிளவுபடக்கூடாது என்பதால் எனக்கு எந்த பதவியும் வேண்டாம் என தெரிவித்து உள்ளார். தொடர்ந்து பாமகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் தொடர்ந்து நீடிக்க விரும்புவதாகவும் முகுந்தன் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் உள்ள மருத்துவர் ராமதாஸை சந்திப்பதற்காக சென்னையில் இருந்து அன்புமணி ராமதாஸ் புறப்பட்டுள்ளார். இந்த சந்திப்பில் பாமக இளைஞரணி தலைவராக யாரை நியமிப்பது என்பது குறித்து ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.