Annamalai: மோடியை சந்தித்த ஆளுநர்! பற்ற வைத்த நெருப்பு! மாற்றப்படுகிறாரா அண்ணாமலை?
டெல்லி சென்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் தமிழ்நாடு அரசியல் நிலவரங்கள், அதிமுக கூட்டணி உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக சில தகவல்கள் கேட்டுப்பெறப்பட்டுள்ள நிலையில் தமிழக பாஜகவிலும் சில மாற்றங்கள் ஏற்படலாம் என கூறப்படுகின்றது.

டெல்லியில் முகாமிட்டுள்ள ஆளுநர் தமிழ்நாட்டின் அரசியல் நிலவரம், அதிமுக கூட்டணி உள்ளிட்ட விவரங்களை விவாதிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில், தொடர்ந்து அவரது பதவியில் நீடித்து வருகிறார். மீண்டும் ஆளுநராக ஆர்.என்.ரவியே தொடர வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்து பேசி உள்ளார்.
ஆளுநர் உரையுடன் தொடங்கும் பேரவை!
வரும் ஜனவரி 6ஆம் தேதி அன்று தமிழ்நாடு சட்டப்பேரவை ஆளுநர் உரை உடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய சபாநாயகர் அப்பாவு, சொந்த கருத்துகள் ஏதும் கூறாமல், ஆளுநர் தனது உரையை வாசிப்பார் என நம்புவதாக கூறினார். கடந்த காலங்களில் ஆளுநர் தனது உரையை முழுமையாக படிக்கவில்லை என்றும் அவர் கூறி இருந்தார்.