தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Sister Tried To Kill Her Own Brother For Properties

கொடுஞ்செயல்… சொத்துக்காக சொந்த அண்ணனையே இப்படியா பண்ணுவாங்க…

Priyadarshini R HT Tamil
Mar 20, 2023 07:41 AM IST

Property dispute: சென்னை பெரம்பூரில் சொத்து தகராறு காரணமாக தூங்கிக்கொண்டிருந்த அண்ணன் மீது பெட்ரோலை ஊற்றி எரிக்க முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்தார்கள்.

அண்ணன் தங்கை, தனலட்சுமி மற்றும் முனிரத்னம்
அண்ணன் தங்கை, தனலட்சுமி மற்றும் முனிரத்னம்

ட்ரெண்டிங் செய்திகள்

முனிரத்தினம் தனது சொந்த வீட்டின் கீழ்தளத்தில் வசித்து வருகிறார். அதே வீட்டின் கீழ் தளத்தில் உள்ள மற்றொரு வீட்டில் அவருடைய தங்கை தனலட்சுமியும், மேல் தளத்தில் உள்ள வீட்டில் மற்றொரு தங்கை பாக்கியலட்சுமியின் கணவர் தாமோதரன், தனது மகனுடனும் வசித்து வருகி றார்.

இந்நிலையில் அதிகாலை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த முனிரத்தினத்தின் உடலில் தீடிரென தீப்பிடித்து எரிந்தது. வலியால் அவர் அலறினார். சத்தம்கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் அவரது உடலில் எரிந்த தீயை அணைத்தனர்.

இதுகுறித்த தகவல் கிடைத்தவுடன், திரு.வி.க நகர் போலீசார், 90 சதவீதம் தீக்காயத்துடன் இருந்த முனிரத்தினத்தை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் சொத்துத்தகராறு காரணமாக தனலட்சுமி, வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தனது சொந்த அண்ணன் முனிரத்தினம் மீது பெட்ரோலை ஊற்றி உயிருடன் எரித்துக் கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தனலட்சுமியை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். 

பெட்ரோல் ஊற்றியபோது நிச்சயம் அவருக்கு தெரிந்திருக்கும். பெட்ரோல் ஊற்றியவுடனே தீவைத்திருக்கிறார்கள். இல்லாவிட்டால் அவர் தப்பித்திருக்க வாய்ப்பு கிடைத்திருக்கும் என்று போலீசார் தெரிவித்தார்கள். 

இந்த சம்பவத்தை பார்த்த அப்பகுதி மக்கள், அவர்களுக்கு குழந்தைகளும் இல்லை, மனைவியும் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார். இவரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சொத்துக்காக சொந்த அண்ணனையே இப்படியா செய்வாங்க என்று பரிதாப்பட்டு கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் எப்படியும் அவருக்கு பின்னர் அவரது சொத்துக்களை இவர்கள்தான எடுத்துக்கொள்ளப்போகிறார்கள். உறவுகள் எப்போதும் கசப்பான அனுபவங்களைத்தான் தரும். நாம்தான் அவற்றையெல்லாம் கடந்து நமது வாழ்க்கையை பார்த்து சென்று கொண்டிருக்க வேண்டும். சொத்துக்காவெல்லாம் இப்படி கொலை வரை செல்வது கூடாது என்று அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்தார்கள். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்