தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Singappenney: Meghbooba Mufti, The First Woman Chief Minister Of Jammu And Kashmir

Singappenney: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதல் பெண் முதல்வர் மெகபூபா முப்தி!

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 07, 2024 05:45 AM IST

இன்று ஆட்சியில் இல்லாவிட்டாலும் காஷ்மீர் அரசியலை திரும்பி பார்க்கும் எவரும் மெகபூபா முப்தியை மறக்க முடியாது என்பதே நிதர்சனம்.

மெகபூபா முப்தி
மெகபூபா முப்தி

ட்ரெண்டிங் செய்திகள்

பிறப்பு

மெகபூபா முப்தி கடந்த 1959ம் ஆண்டு மே 22ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்தநாக்கின் அக்ரான் நவ்போரா கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை முஃப்தி முகமது சயீத். இவர் மக்கள் ஜனநாயக கட்சியின் நிறுவனர் ஆவார். தாய் குல்ஷன் ஆரோ. மெகபூபா முதலில் ஜம்மு காஷ்மீரில் உள்ள அரசு கல்லுரியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றார். 1989க்கு பின் தில்லிக்கு இடம் பெயர்ந்த மெகபூபா பாம்பே மெர்கன்டைல் வங்கியில் சேர்ந்தார். அதன் பின் ஜம்மு காஷ்மீருக்கு திரும்பிய மெகபூபா ஈஸ்ட் வெஸ்ட் ஏர்லைன்ஸில் பணியாற்றினார்.

அரசியல் பயணம்

1996ல் மெகபூபா முப்தி அரசியலுக்குள் வந்தார்.

1996ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் பிஜ்பெகரா சட்டமன்ற தொகுதியிலிருந்து ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் 1999ல் முப்தி முகமது சையத் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் விலகி ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியை தொடங்கினார். அதில் மெகபூபா முப்தி துணை தலைவரானார்.

அதே ஆண்டில் 1999 ஸ்ரீநகர் தொகுதியில் ஓமர் அப்துல்லாவை எதிர்த்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு 35,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

2002ம் ஆம் ஆண்டில் பிடிபி வேட்பாளராக பஹால்காம் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், ஜேகெஎன் கட்சியின் ராஃபி ஆஹ். மிர்-ஐ 2139 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

பின்னர் 2004ம் ஆண்டு முப்தி14 ஆவது மக்களவைத் தேர்தலில் அனந்தநாக் தொகுதியில் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்டார். ஜேகேஎன் கட்சியின் வேட்பாளரை 39,938 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

இதையடுத்து கடந்த 2014ம் ஆண்டு நடந்த 16 வது மக்களவைத் தேர்தலில் பிடிபி சார்பில் அனந்தனாக் தொகுதியில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட மெகபூபா, அங்கு ஜேகேஎன்-ன் மிர்ஸா மெஹ்போப்-ஐ தோற்கடித்தார்.

இந்நிலையில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து கடந்த 4 ஏப்ரல் 2016 அன்று ஜம்மு காஷ்மீர் மாநில முதல் பெண் முதலமைச்சராக பதவியேற்றார்.

காஷ்மீரில் கூட்டணி அரசாங்கத்திற்கு அளித்துவந்ந ஆதரவை பாஜக திரும்ப பெற்றதால் ஜூன் 19, 2018 அன்று அவர் ராஜினாமா செய்தார்.

இன்று ஆட்சியில் இல்லாவிட்டாலும் ஜம்மு காஷ்மீர் அரசியலை திரும்பி பார்க்கும் எவரும் மெகபூபா முப்தியை மறக்க முடியாது என்பதே நிதர்சனம்.

 

WhatsApp channel

டாபிக்ஸ்