எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மாற்றுக்கட்சி உறுப்பினர்கள் பலர் அதிமுகவில் இணைவு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மாற்றுக்கட்சி உறுப்பினர்கள் பலர் அதிமுகவில் இணைவு!

எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மாற்றுக்கட்சி உறுப்பினர்கள் பலர் அதிமுகவில் இணைவு!

Marimuthu M HT Tamil Published May 20, 2025 01:51 PM IST
Marimuthu M HT Tamil
Published May 20, 2025 01:51 PM IST

பிற கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 200-க்கும் மேற்பட்டோர் அக்கட்சிகளில் இருந்து விலகி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

எடப்பாடி பழனிசாமி  முன்னிலையில் மாற்றுக்கட்சி உறுப்பினர்கள் பலர் அதிமுகவில் இணைவு!
எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மாற்றுக்கட்சி உறுப்பினர்கள் பலர் அதிமுகவில் இணைவு!

சேலம் மாவட்டம், தாரமங்கலம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் காங்கேயன் ஏற்பாட்டில் திராவிடர் முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, தமிழக வெற்றிக் கழகம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் உள்ளிட்ட மாற்று கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என 200-க்கும் மேற்பட்டோர், அதிமுக கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இந்தச் சந்திப்பு, எடப்பாடி பழனிசாமியின் சேலம் - சிலுவம்பாளையம் இல்லத்தில் நடைபெற்றது.

பிறகட்சியினர் அதிமுகவில் இணைவு:

சேலம் புறநகர் மாவட்டம், தாரமங்கலம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் காங்கேயன் ஏற்பாட்டில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக இளைஞர் அணி மாவட்ட செயலார் சிவக்குமார், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாணவரணி மாவட்ட செயலாளர் சக்திவேல், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட துணைச்செயலாளர் சுதா அண்ணாமலை, பனங்காட்டூர் திமுக கிளை பிரதிநிதி ஜெயவேல் ஆகியோர் இணைந்தனர்.

அனைவருக்கும் தரப்பட்ட அதிமுக உறுப்பினர் அட்டை:

மேலும், ஆரூர்பட்டி பாமக கிளை செயலாளர் சக்திவேல், காங்கிரஸ் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயகோபி, தமிழக வெற்றிக்கழக தெசவிளக்கு கிளைத் தலைவர் பிரபு உள்பட அக்கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 200-க்கும் மேற்பட்டோர் அக்கட்சிகளில் இருந்து விலகி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

அதன்பின் அனைவரும் அதிமுகவின் உறுப்பினர் அட்டையைப் பெற்றதோடு, எடப்பாடி பழனிசாமியுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.