Senthil Balaji: இலாகா இல்லாத அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த செந்தில் பாலாஜி
தமிழ்நாடு அமைச்சரவையில் இலாகா இல்லாத அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துள்ளதாக
சட்ட விரோத பண பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் அமலாக்கதுறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக பதவி வகித்து வந்தார். கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டு சுமார் 230 நாள்களாக சென்னை புழல் சிறையில் இருந்து வரும் செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவலை 19 முறையாக நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதையடுத்து அவர் தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செந்தில் பாலாஜியை கைது செய்த பிறகு அமலாக்க துறையினர் 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். இந்த விசாரணை முடிந்த பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்களை அமலாக்கத்துறை தாக்கல் செய்தது.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும், பின்னர் உச்சநீதிமன்றமும் தள்ளுபடி செய்தது. நீதிமன்றக் காவலில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது நீதிமன்ற காவல் இதுவரை 19 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி புதியதாக கட்டி வரும் வீட்டின் மதிப்பு, பரப்பளவு, செய்யப்பட்டுள்ள செலவுகள் குறித்தும், செந்தில் பாலாஜியின் நண்பர் நடத்தும் உணவகத்திலும் கடந்த ஜனவரி 11ஆம் தேதி அன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதன்பின்னர் கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்