சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கு: தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜியின் சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கு: தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜியின் சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர்!

சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கு: தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜியின் சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Marimuthu M HT Tamil
Updated Apr 09, 2025 02:11 PM IST

சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டார்.

சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கு: தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜியின் சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர்!
சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கு: தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜியின் சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர்!

அசோக் குமார் மற்றும் அவருடைய உதவியாளர்களுக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பிய நிலையில் இன்று நேரில் ஆஜர் ஆகியிருக்கிறார், அசோக் குமார். குறிப்பாக, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் ஆஜராகி இருக்கிறார். இதன்மூலம் இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் பொதுவெளிக்கு வந்துள்ளார்.

செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணி பெற்றுத் தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக, 2023ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்தனர், அமலாக்கத்துறையினர். அப்போது அவர் மீது சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன்பின், சிறையில் இருந்த செந்தில் பாலாஜி, கடந்த 2014ஆம் ஆண்டு பிணையில் வெளியே வந்து மீண்டும் திமுக அரசில் அமைச்சர் ஆனார்.

கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் சிக்கிய அசோக் குமார்:

மேலும், இவ்வழக்கில் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார், முன்னாள் உதவியாளர் சண்முகம் உள்ளிட்ட 13 பேர் மீது சந்தேகத்தைக் கிளப்பியது. கடந்த 2025 ஜனவரி மாதம் கூடுதல் குற்றப்பத்திரிகை வெளியானது. கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் அவர் மீது பகிரங்கமாக குற்றம்சாட்டியது.

சம்மனால் வந்த அசோக் குமார்:

அதன்பின் கூடுதல் குற்றப்பத்திரிகையில் தொடர்பு இருந்த செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் உள்ளிட்ட 13 பேர் நேரில் ஆஜராகக் கோரி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். கார்த்திகேயன் சம்மன் அனுப்பி உத்தரவு பிறப்பித்து இருந்தார். அதன்பேரில், அசோக் குமார் சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் நேரில் ஆஜர் ஆகினார்.

குறிப்பாக, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் பொதுவெளிக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.