தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Senior Journalist Savukku Shankar Press Conference At Chennai Police Commissioner Office

Savukku Shankar: ’கொள்ளை அடித்துதான் ஸ்டூடியோ தொடங்கினேன்!’ சவுக்கு சங்கர் பளீச் பேட்டி!

Kathiravan V HT Tamil
Feb 23, 2024 03:46 PM IST

“Savukku Shankar: நான் பணம் வாங்கி கொண்டு பேசுகிறேனா அல்லது பணம் வாங்காமல் பேசுகிறேனா என மக்கள் எளிதாக கண்டுபிடித்துவிடுவார்கள்”

மூத்த பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் - நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன்
மூத்த பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் - நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த வழக்கை சென்னை மாநகர காவல்துறை விசாரணை செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அப்படி இல்லை என்றால் நீதிமன்றத்தை அனுகி சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோருவேன். 

நான் காவல்துறையில் புகார் அளித்த பிறகு ஜி ஸ்கொயர் நிறுவனம் வருமனவரித்துறை அட்டாஜ் செய்த சர்வே எண்கள் வேறு, நாங்கள் விற்கும் சர்வே எண்கள் வேறு என்ற விளக்கத்தை அளித்துள்ளார்கள், பொய்யான புகாரை நான் அளித்ததாக கூறி என் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர்.

வருமான வரித்துறைக்கு 38 கோடி கட்ட ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜி ஸ்கோயர் நிறுவனம் 2023ஆம் ஆண்டில் இடிஏ நிறுவனத்திடம் இருந்து வாங்கியது. அந்த பத்திரத்தில் வருமானவரித்துறையின் அட்டாச்மண்ட் ஆர்டர் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

எல்லா நேரத்திலும் ஒரே நிலைப்பாட்டோட்டு இருக்க முடியாது. இன்றைக்கும் மணல் கொள்ளை குறித்து தொடர்ந்து பேசி வருகிறேன். நான் பணம் வாங்கி கொண்டு பேசுகிறேனா அல்லது பணம் வாங்காமல் பேசுகிறேனா என மக்கள் எளிதாக கண்டுபிடித்துவிடுவார்கள். 

சவுக்கு அலுவலகத்திற்கு அதிமுக சார்பில் பணம் தரப்பட்டுள்ளதாக நாம் தமிழர் கட்சி துரைமுருகன் கூறி உள்ளது குறித்த கேள்விக்கு, ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் பி.ஆர். பணிகளை செய்யும் செவன் மைல்ஸ் நிறுவனம் செலவு செய்து இது போன்ற வீடியோக்கள் வந்து கொண்டு இருக்கிறது. ஆந்திராவில் ஒரு வங்கியை கொள்ளை அடித்துதான் நான் ஸ்டூடியோவை தொடங்கினேன் என கூறினார். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்