அண்ணா பல்கலைக்கழக விவகாரம்! வடநாடுனா வைலண்ட்! தமிழ்நாடுனா சைலண்டா? ராகுல் காந்தியை விளாசும் பத்திரிக்கையாளர் மணி!
ஒரு வாரம் முன் மகாராஷ்டிராவில் ஒரு தலித் பெண் படுகொலை செய்யும் போது சென்றார். போய் வாருங்கள் தப்பில்லை. பாஜக ஆளும் மாநிலம் என்றால் வாயை திறப்பீர்கள். இந்த கேடுகெட்ட அரசியலுக்கு என்ன பெயர் என ராகுல் காந்திக்கு மூத்த பத்திரிகையாளர் மணி கேள்வி
என்ன நடந்தாலும் பொங்கி எழும் ராகுல் காந்தி அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன் கொடுமை விவகாரத்தில் வாயை திறந்தாரா? என மூத்த பத்திரிக்கையாளர் மணி கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழ்நாட்டில் தொடரும் வன்கொடுமைகள்
இது தொடர்பாக தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், என்ன நடந்தாலும் பொங்கி எழும் ராகுல் காந்தி வாயை திறந்தாரா?. அண்ணாநகரில் 3 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை என்று புகார் கொடுக்க சென்ற குழந்தையின் பெற்றோரை நிர்வாணமாக்கி அடித்து உள்ளனர். உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது.
20 வயது மனநலம் பாதிக்கப்பட்ட மாணவியை 7 மாணவர்கள் 6 மாதகாலம் வால்டாக்ஸ் சாலையில் பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர். இந்த 7 மாணவர்களையும் எச்சரித்து, புத்தி சொல்லி அனுப்பி உள்ளனர்.
ராகுல் காந்தி வாயை திறந்தாரா?
இதை அடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தில் இது போன்ற சம்பவம் நடந்து உள்ளது. இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்த விவகாரத்தில் வாயை திறந்தாரா?
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இதுவரை அறிக்கை கொடுத்து உள்ளதா? மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசத்தில் நடந்தால் பொங்கி எழுந்து வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த வருபவர்கள் நவத்துவாரங்களையும் பொத்திக் கொண்டு இருக்கிறார்.
ஒரு வாரம் முன் மகாராஷ்டிராவில் ஒரு தலித் பெண் படுகொலை செய்யும் போது சென்றார். போய் வாருங்கள் தப்பில்லை. பாஜக ஆளும் மாநிலம் என்றால் வாயை திறப்பீர்கள். இந்த கேடுகெட்ட அரசியலுக்கு என்ன பெயர் என கேள்வி எழுப்பி உள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் வன்கொடுமை
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தனது காதலருடன் மாணவி ஒருவர் பேசிக் கொண்டிருந்த நிலையில், அப்போது வந்த அடையாளம் தெரியாத நபர், இருவரையும் வீடியோ எடுத்ததுடன், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், ஞானசேகரன் என்பவரை கைது செய்தனர். அவர் தப்பியோடி முயன்ற போது கீழே விழுந்ததில் அவருக்கு கை மற்றும் கால்களில் எலும்பு முறிவும் ஏற்பட்டு உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக நடத்திய விசாரணையில் மாணவியிடம் அத்துமீறும் முன்னர் ’சார்’ பெயரில் ஞானசேகரன் செல்போனில் ஒருவரிடம் பேசியதாக தெரிகிறது.