Thiruparankundram: பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை வீட்டுசிறையில் வைத்த போலீஸ்! உச்சகட்ட பதற்றம்! ஏன் தெரியுமா?
நேற்றைய தினம் மதுரையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இன்று காலை திருப்பூரில் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமண்யம் கைது செய்யப்பட்டார். மேலும் திருப்பரங்குன்றத்தில் போராட்டம் நடத்தி திட்டமிட்டதாக பல்வேறு இந்து முன்னணி நிர்வாகிகளை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

திருப்பரங்குன்றத்தில் போராட்டம் நடத்த திட்டமிட்ட நிலையில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டு உள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை விவகாரம்
திருப்பரங்குன்றம் மலை பகுதியில் உள்ள சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி உள்ளிட்ட பலிகளை தரக்கூடாது என இந்து இயக்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவத்தின் போது ஆய்வு செய்ய வந்த ராமநாதபுரம் எம்.பியும், வஃபு வாரிய உறுப்பினருமான நவாஸ்கனி மலை மீது அசைவ உணவு உண்டதாக பாஜகவினர் குற்றம்சாட்டி இருந்தனர். இந்த குற்றச்சாட்டுக்கு நவாஸ்கனி மறுப்பு தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் நாளைய தினம் (05-02-2025) அன்று திருப்பரங்குன்றம் மலைப்பகுதியை பாதுக்காக்க கோரி ஆர்பாட்டம் நடத்த உள்ளதாக இந்து முன்னணி அறிவித்தது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை அடுத்த அழகாபுரியில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு சொந்தமான பண்ணை வீடு உள்ளது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க இந்து முன்னணி போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பலரும் கலந்து கொள்ள வேண்டும் என ஹெச்.ராஜா சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார்.
இதனை அடுத்து நேற்றைய தினம் மதுரையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இன்று காலை திருப்பூரில் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமண்யம் கைது செய்யப்பட்டார். மேலும் திருப்பரங்குன்றத்தில் போராட்டம் நடத்தி திட்டமிட்டதாக பல்வேறு இந்து முன்னணி நிர்வாகிகளை போலீசார் கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் காரைக்குடி அருகே உள்ள பண்ணை வீட்டில் இருந்த பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவும், திருப்பரங்குன்றம் செல்ல திட்டமிட்டார். இந்த நிலையில் அவரை அவரது பண்ணை வீட்டிலேயே காவல்துறை சிறை வைத்து உள்ளது.

டாபிக்ஸ்