’நவீன கோமாளி ஸ்டாலின்! கூவல் கொத்தடிமை ரகுபதி!’ கலாய்த்து தள்ளும் செல்லூர் ராஜூ!
”தமிழ் நாட்டில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது; பெண்களின் பாதுகாப்பு பாதாளத்தில் உள்ளது; போதைப் பொருள் புழக்கம் அமோகமாக உள்ளது. மொத்தத்தில் கும்பி எரியுது, குடல் கருகுது, குளு குளு ஊட்டி போட்டோ ஷூட் கேட்கிறதா? என்று நவீன கோமாளி ஸ்டாலினிடம் கேட்டுச் சொல்லுங்கள் மிஸ்டர் ரகுபதி”

’எவ்வளவு மேக்கப் போட்டாலும், எத்தனை போட்டோ ஷூட் நடத்தினாலும் கோமாளி ஸ்டாலினால் இனி மக்களை ஏமாற்ற முடியாது’ என செல்லூர் ராஜூ தெரிவித்து உள்ளார்.
கோமாளி! கொத்தடிமை
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் நாட்டில் என்ன நடக்கிறது என்பதே கொஞ்சம் கூட தெரியாமல், கடந்த நான்கு ஆண்டுகள் இம்சை அரசன் புலிகேசி தர்பார் நடத்தி வரும் நவீன கோமாளி மன்னன் ஸ்டாலினின் ஆஸ்தான கூவல் கொத்தடிமை ரகுபதி, இத்தனை ஆண்டுகள் முட்டுக் கொடுத்து கொடுத்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்களிடம் வாங்கிய தர்ம அடிகளுக்கெல்லாம் பரிசாக இப்போதுதான் கனிமவளக் கொள்ளையடிக்க லைசன்ஸ் கொடுக்கும் விதமாக, அமைச்சர் இலாகா கொடுத்துள்ளார் பொம்மை முதலமைச்சர். அந்த உற்சாகத்தில் பலத்த முட்டுகளுடன் நேற்று (14.5.2025), ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
உண்ட வீட்டுக்கு ரெண்டகம்
யார் இந்த ரகுபதி? இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் கைகாட்டவில்லை என்றால், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் வியர்வையும், ரத்தமும் சிந்தி உழைக்கவில்லை என்றால், இவர் எங்கு இருந்திருப்பார்? இவருக்கு அரசியல் வாழ்வளித்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களின் உழைப்பை உறிஞ்சி, உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்யும் ஒட்டுண்ணியைவிடக் கேவலமானவர் தானே இந்த ரகுபதி.