TN Assembly: 'மதுரை தென்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்.. புறவழிச்சாலை அமைக்கப்படுமா?’: செல்லூர் ராஜூ கேள்வி
TN Assembly: மதுரை தென்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக புறவழிச்சாலை அமைக்கப்படுமா என செல்லூர் ராஜூ தமிழக சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

TN Assembly: மதுரை தென் பகுதியில் கடும்போக்குவரத்து இருக்கிறது என செல்லூர் ராஜூ சட்டப்பேரவையில் குரல் எழுப்பிய நிலையில், அதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்து இருக்கிறார்.
செல்லூர் ராஜூ சட்டப்பேரவையில் பேசுகையில், ‘மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே.. மதுரையில் மக்கள் பெருக்கம் அதிகமாகிவிட்டது. ஏன் எங்க மேற்குத் தொகுதியில் மதுரை காளவாசலில் இருந்து அரசரடி வரை போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருக்கிறது. கோட்டயம், கொச்சி, எர்ணாகுளம், அதேமாதிரி மூணாறு போவதற்கு இந்த ஒரே சாலை தான். இந்த கடும் நெருக்கடியைப் போக்குவதற்கு மாற்று வழியாக, தென்பகுதியில் வைகையாற்றை ஒட்டி புறவழிச்சாலை அமைத்தால் எந்த ஒரு இட நெருக்கடியும் இருக்காது. எனவே, தென்வழியில் புறவழிசாலை அமைக்கப்படுமா?’ என ஆளும் தரப்பினரிடம் புன்னகை ததும்ப கேள்வி எழுப்பினார், செல்லூர் ராஜு.