Seeman With Prabhakaran : 'பிரபாகரனுடன் சீமான்.. நான் செய்த எடிட்' புயலைக் கிளப்பிய இயக்குநர்!
இயக்குநர் சங்ககிரி ராஜ் குமார் தனது முகநூல் பதிவில் கூறியிருப்தாவது, "இவர், அவரை சந்திக்கவே இல்லை. எதன் அடிப்படையில் சொல்கிறேன் என்றால்.. அந்த புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்தவன் என்கிற அடிப்படையில்." இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுடன் இருந்த புகைப்படம் தமிழக அரசியலில் மிகப்பெரிய கவனம் பெற்றது. இந்த புகைப்படத்தை தொடர்ந்து சீமான் தனக்கும் பிரபாகரனுக்கும் இடையே உள்ள உறவுகுறித்து பல தகவல்களை பகிர்ந்தார். அந்த தகவல்கள் அவ்வப்போது தமிழக அரசியலில் பேசுபொருளானது. இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன் சீமான் தந்தை பெரியாரை விமர்சித்தார். இதற்கு பல தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் தான் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் அந்த படத்தை எடிட் செய்ததே நான் தான் என்று முகநூலில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சங்ககிரி ராஜ் குமார் தனது முகநூல் பதிவில் கூறியிருப்தாவது, "இவர், அவரை சந்திக்கவே இல்லை. எதன் அடிப்படையில் சொல்கிறேன் என்றால்.. அந்த புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்தவன் என்கிற அடிப்படையில்." இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்
இது குறித்து சன் நியூஸ் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது, நான் தமிழன் தொலைக்காட்சியில் டைட்டில் அனிமேட்டராக வேலை செய்து கொண்டிருந்தேன். அப்போது செங்கோட்டையன் என்பவர் ஒரு நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்தவர். அவர் சீமான் அண்ணன் கூடவும் ரெம்ப நெருக்கமாக இருக்க கூடியவர். விசாரணை என்ற டைட்டில் அனிமேஷனுக்காக எனக்கு பாராட்டு விழா வைத்து தங்க மோதிரத்தை பரிசளித்தார் தமிழன் டிவி எம்டி.
பின்னர் மக்கள் தொலைக்காட்சியில் வெங்காயம் என்ற தொடரை வாரம் ஒரு எபிசோடாக செய்ய மக்கள் தொலைக்காட்சிக்கு வந்தேன். அப்போதும் வெளியில் இருந்து வந்து செங்கோட்டையனுக்கு டைட்டில் அனிமேஷன், டைட்டில் கார்டு எல்லாம் நான் ப்ரி லேண்சராக எடிட் செய்து கொடுத்து கொண்டிருந்தேன். அப்போது தலைவர் பிரபாகன் மகேந்திரன் சார் கூட இருப்பது, உள்ளிட்ட வேறு சில புகைப்படங்களை எல்லாம் ஒரு டிவிடியில் போட்டு எடுத்து வந்தார். இதுபோல் புகைப்படத்தில் தலைவர் பிரபாகரன் படத்துக்கு பக்கத்தில் அண்ணன் சீமான் இருப்பது போன்று எனக்கு வேண்டும் என்று சொல்லி கேட்டார். நான் எதற்கு என்று கேட்ட போது நாங்க அவருக்கு சர்ப்ரைஸாக கிப்ட் கொடுத்தான். அவர் வீட்டில் ப்ரேம் போட்டு வைத்து கொள்வார் என்றார்.
அப்போது எனக்கு சீமான் அண்ணனை முன் கூட்டியே தெரியும். போட்டோஷாப் 7 அந்த மாதிரி தான் இருந்தது அப்போது நேச்சராக லைவாக ஒரு விஷயத்தை பண்ணுகிறோம் என்ற போது மிகவும் இன்ட்ரஸ்ட் ஆக இருந்தது .என்னால் முடிந்த அளவு நான் எடிட் செய்து கொடுத்திருந்தேன்.ஆனால் இப்போது அதை எல்லாம் பார்க்கும் போது எனக்கு நிறைய குறைபாடுகள் தெரிகிறது. அவருடைய தலைக்கு பின் ஷேடோ வைத்திருப்போம். அண்ணனின் கைக்கு பின்னாடி அந்த ஷேடோவை வைக்க மறந்திருப்போம். ஒருத்தருக்கு ஷேடோ தலைக்கு பின்னாடி விழுந்தது என்றால் இன்னொருத்தர் பின்னாடியும் இருக்க வேண்டும் இல்லையா.. ஆனால் தலைவர்களுடைய படத்திற்கு பின் அந்த ஷேடோ எல்லாம் வைத்திருக்க மாட்டோம். அந்த அளவுக்கு டீடைலாக பண்ண வேண்டும் என்று எல்லாம் நினைத்து பண்ணவில்லை. சரி ஒரு பிரேம் போட்டு மாற்றுவதற்காக அண்ணன் கேட்கிறார் என்று சொல்லிவிட்டு செங்கோட்டையனுக்காக பண்ணி கொடுத்ததுதான் அந்தப் புகைப்படம். ஆனால் பிற்காலத்தில் நேரில் சந்தித்ததாக வேறு ஒரு தகவல்களோடு உலா வரும்போது நான் ஒரு முறை வெங்காயம் படம் ரிலீசான போது செங்கோட்டையனிடம் கேட்டேன். என்ன அண்ணா நீங்க வீட்டில் பிரேம் போட்டு மாற்றுவதற்கு என்று சொன்ன படம் இன்று வேற மாதிரியான தகவல்களோடு போய்க் கொண்டு இருக்கிறதே என்றேன். அதற்கு விடுடா நம்மளோட ஒரு புகைப்படத்தால் இன்று ஒரு அரசியல் தலைவரை உருவாக்கி இருக்கிறோம். அவர் வளர்ந்து வந்தால் நமக்கு நல்லதுதானடா நம்ம அண்ணன் தானடா என்று மிகவும் சந்தோஷப்பட்டார். மேலும் அண்ணனும் மிகவும் சந்தோஷப்பட்டார் டா என்று என்று சொன்னார்.
நல்ல விஷயத்திற்காக பயன்படுகிறது
அப்போதைக்கு நம்ம கொடுத்த புகைப்படம் ஒரு நல்ல விஷயத்திற்கு பயன்படுகிறது என்று நினைத்து சந்தோஷம்தான் பட்டேன். அதற்கு நடுவில் கொளத்தூர் மணி, விடுதலை ராஜேந்திரன் இவர்களெல்லாம் திரைத்துறையில் கொடுத்து எடிட் பண்ண புகைப்படம் என்று சொன்ன தகவல்கள் எல்லாம் வெளியில் வந்தது. நான் அப்போதும் செங்கோட்டையனிடம் கேட்டேன் நீங்கள் எதுவும் தகவல் சொன்னீர்களா என்று அதற்கு அவர் நான் யாரிடமும் சொல்லவில்லை என்று சொன்னார். தலைவர் இல்லாத கட்டத்தில் நாம் அதை முன்னெடுத்து அந்த இயக்கத்தை முன்னெடுத்து நடக்கும் ஒரு இடத்தில் இருக்கும் போது அந்த புகைப்படம் பயன்படுத்தும் போது நல்லது தானே என்று சொன்னார். தலைவர் பிரபாகரனை அவ்வளவு நேசித்த நாம், அவருக்கு அடுத்து யாரும் இல்லா சூழலில் அது பயன்படும் போது அந்த உண்மையைச் சொல்ல வேண்டும் என்ற எண்ணமே எனக்கு எந்த இடத்திலும் வரவில்லை.
நான் உருவாக்கிய படம்
இந்தப் புகைப்படம் நான் உருவாக்கியது. அவர் பிரபாகரனை சந்தித்தாக வேறு எந்த படமும் கிடைக்கவில்லை. அவரும் வெளியிடவில்லை. அவர் சந்தித்தபோது புகைப்படம் எடுத்தாரா அவர் பிரபாகரன் சந்தித்தாரா என்று நான் ஆதாரப்பூர்வமாக சொல்ல முடியாது. ஏனென்றால் இந்தப் புகைப்படம் ஒரிஜினலாக எடுக்கப்பட்டது இல்லை என்பதை மட்டும் என்னால் சொல்ல முடியும். அது நான் எடிட் செய்தவன் என்ற பெயரில் நான் உறுதியாக சொல்கிறேன். எனக்கு என்ன என்றால் அண்ணன் சீமான் அடிக்கடி சொல்கிறார் பிரபாகரன் அவர்களின் பெயரை உச்சரிப்பதற்கு இங்கு பலரும் பயந்து இருந்த சூழலில் நான் தான் நான் வந்த பிறகுதான் இந்த பெயரை உச்சரிக்க கூடிய சூழல் உருவானது என்றெல்லாம் சொல்கிறார். இந்த நிலையில் அந்த புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்ததன் அடிப்படையில் நிறைய நேரம் எனக்கு மனது கஷ்டப்பட்டு இருக்கிறது. ஏனென்றால் இந்த புகைப்படத்தை அடிப்படையாக வைத்து அவர் சொல்லும் கதைகள் உண்மைக்கு முரணானதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்

டாபிக்ஸ்