Seeman : சீமான் வீட்டை முற்றுகையிட முயன்றவர்கள் கைது.. பெரியாரா, பிரபாகரனா.. மோதிப் பார்த்துவிட வேண்டியதுதான்- சீமான்
Seeman : சீமான் பிரபாகரனுடன் எடுத்த புகைப்படம் போலி என்ற சர்ச்சை எழுந்திருந்தநிலையில், இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "எத்தனை பேர் தான் அந்த புகைப்படத்தை எடிட் செய்தார்கள். பெரிய எடிட்டரா நீங்கள் எல்லாம்.. காமெடி செய்து கொண்டிருக்காதீர்கள்.

Seeman : தந்தை பெரியார் திராவிட கழக தலைவர் கு.ராம கிருஷ்ணன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுளளது. முன்னதாக பெரியாரா, பிரபாகரனா என்று ஆகிவிட்டது..மோதிப் பார்த்துவிட வேண்டியதுதான் என செய்தியாளர்களிடம் பேசிய சீமான் தெரிவித்துள்ளார்.
பெரியார் குறித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் சர்ச்சை பேச்சை கண்டிக்கும் வகையில், இன்று பெரியார் கூட்டமைப்பு மற்றும் மே 17 இயக்கத்தினர் இன்று காலை அவரது வீட்டை முற்றுகையிட உள்ளதாக அறிவித்திருந்தனர். முன்னதாக இது தொடர்பான சுவரொட்டிகள் சென்னை மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டிருந்தன. சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீடு முன்பாகவும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இந்த சூழலில் சென்னை நீலாங்கரையில் முற்றுகையிடும் அமைப்பினருக்கு எதிர்ப்பு தெரிவிக்க சீமான் வீடு முன்பாக ஏராளமான நாம் தமிழர் கட்சியினரும் இரவு முதலே குவிந்திருந்தனர்.
இந்த நிலையில் நீலாங்கரையில் உள்ள நா.த.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. பெரியார் கூட்டமைப்பு மற்றும் மே 17 இயக்கத்தினர் இன்று அவரது வீட்டை முற்றுகையிட உள்ள நிலையில், ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் சீமான் வீடு அமைந்துள்ள சென்னை நீலாங்கரை பகுதியில் பரபரப்பும் பதற்றமும் நிலவி வருகிறது. தற்போது முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.